தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பெண்களுக்கு பெண்களால் நடத்தப்படும் விடுதி!

கொச்சி நகரில் அரசு நிறுவனங்கள்,  தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகமிருப்பதால்,  இங்கு வருகை தரும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

News image
Updated On :7 ஜனவரி 2024, 10:42 am

கொச்சி நகரில் அரசு நிறுவனங்கள்,  தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகமிருப்பதால்,  இங்கு வருகை தரும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பெண்கள் பயமின்றி  பாதுகாப்புடன்  தங்க,  கொச்சி மாநகராட்சி 'ஷி' லாட்ஜ்'  என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.   இந்த விடுதியானது பெண்களுக்காக,  பெண்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது.
சொந்தப் பணி, அலுவலக வேலை, தேர்வுகள்... போன்றவற்றுக்காகப்  பெண்கள்  தனியே  பயணம் செய்வது அதிகரித்திருக்கிறது.  உறவினர்கள்  அல்லது  தோழிகள் இல்லாத நகரங்களில் அவர்கள்  தனியே  விடுதிகளில்  சில நாள்கள்  தங்க வேண்டிய  கட்டாயம் ஏற்படுகிறது. 
பணிபுரியும் பெண்கள் விடுதிகள் சிலவற்றில் மட்டுமே, ஓரிரு  நாள்கள்  பெண்கள்  தங்கிக் கொள்ள  வசதிகள் உள்ளன.   பெரும்பாலான பெண்களுக்கு சிரமம் உண்டு.  இப்படிப்பட்ட  பெண்களுக்கு  நிம்மதியைத்   தந்துள்ளது கேரள அரசு.
கொச்சி நகருக்கு இரவில் தனியாகத்  தங்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கும்  பெண்களுக்குப்  பாதுகாப்பான தங்கும் வசதியை  குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.  மாணவிகள்,  பணிபுரியும் பெண்கள் குழுவாக வரும் பெண்கள்  பயணிகளே இந்த  'ஷி'  விடுதியின் பயனாளிகள். 
கொச்சி  மாநகரின் முக்கிய இடங்களில்  பெண்களுக்காக  மட்டும்  செயல்படும்  'ஷி'  விடுதிக்கு வந்து செல்ல  24 மணி நேரமும் போக்குவரத்து வசதி உண்டு. விடுதிகள் துவங்கப்பட்ட 9 மாதங்களிலேயே இதுவரை  22,500 பெண்கள்  தங்கிச் சென்றுள்ளனர். 9 மாதங்களில் 24 லட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. 
தனி அறையில்  ஒரு நாள் தங்க  குறைந்தபட்ச வாடகை  ரூ.100 மட்டும்தான். அதிகபட்ச  வாடகை ரூ.200.  
குளியல் அறையுடன்  கூடிய  அறைகளும்,  குழுவாக பெண்கள் தங்க அறைகளும் உண்டு.  ஒரே சமயத்தில்  160 பெண்கள்   தங்கிக் கொள்ள  தேவையான  அறை  வசதிகள் உண்டு.  இங்கு  சி.சி. டி.வி. காமிராக்களுடன் பாதுகாப்பு வசதி, சிறிய நூலகம்,  உணவகம்,  நாப்கின்களைச் சிதைக்கும் கருவி, கழிவு மேலாண்மை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,  கழிவு மேலாண்மை, இணைய வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.  மதிய உணவு பத்து ரூபாய் மட்டும்தான். உணவகத்தை  'குடும்பஸ்ரீ'  என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள்  நடத்துகின்றனர்.  
கொச்சிக்கு வரும் பெண்கள் அழைக்க வேண்டிய எண்கள்: 
 95671 44489 / 9998888777,
-பிஸ்மி பரிணாமன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.