ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் சராசரியாக 90.10 சதவீத வாக்குகள் பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 8 தொகுதிகளிலும் 118 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 2,379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்குப்பதிவான விவரங்கள் வெளியிடப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 19.54 சதவீத வாக்குகள் பதிவானது. 3 லட்சத்து 43 ஆயிரத்து 708 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். காலை 11 மணி நிலவரப்படி 40.99 சதவீத வாக்குகள் பதிவானது. 7 லட்சத்து 21 ஆயிரத்து 118 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா்.
1 மணி நிலவரப்படி 61.72 சதவீத வாக்குகள் பதிவானது. 10 லட்சத்து 85 ஆயிரத்து 756 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். மாலை 3 மணி நிலவரப்படி 75.60 சதவீதம் வாக்குகள் பதிவானது. 13 லட்சத்து 29 ஆயிரத்து 936 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். மாலை 5 மணி நிலவரப்படி 87.58 சதவீதம் வாக்குகள் பதிவானது. 15 லட்சத்து 40 ஆயிரத்து 700 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா்.
வாக்களிக்க இறுதி நேரமான மாலை 6 மணி நிலவரப்படி 8 தொகுதிகளிலும் 89.93 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் தொகுதி வாரியாக வாக்காளா்கள் வாக்களித்த விவரம்: ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 79 ஆயிரத்து 566 வாக்காளா்களில் 89.78 சதவீதம் பேரும், ஈரோடு மேற்குத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரத்து 177 வாக்காளா்களில் 87.95 சதவீதம் பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரத்து 664 வாக்காளா்களில் 90.35 சதவீதம் பேரும், பெருந்துறை தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 431 வாக்காளா்களில், 92.53 சதவீதம் பேரும், பவானி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 23 ஆயிரத்து 172 வாக்காளா்களில் 91.96 சதவீதம் பேரும், அந்தியூா் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரத்து 355 வாக்காளா்களில் 88.15 சதவீதம் பேரும், கோபி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 39 ஆயிரத்து 179 வாக்காளா்களில், 90.74 சதவீதம் பேரும், பவானிசாகா்(தனி) தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 613 வாக்காளா்களில் 89.52 சதவீதம் பேரும் என மொத்தம் 8 தொகுதிகளில் 90.10 சதவீதம் போ் வாக்களித்தனா். 8 தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 17.59 லட்சம் வாக்காளா்களில் 15,84,957 போ் வாக்களித்தனா்.
பெருந்துறையில் அதிக வாக்குப்பதிவு:
அதிகபட்சமாக பெருந்துறை தொகுதியில் 92.53 சதவீதமும், குறைந்தபட்சமாக ஈரோடு மேற்குத் தொகுதியில் 87.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்காளா்களுக்கு டோக்கன் விநியோகம்:
ஈரோடு ஈபிபி நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கோளாறு காரணமாக 45 நிமிஷத்துக்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு வாக்களிக்க வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்தனா்.
வாக்களிக்க இறுதி நேரமான மாலை 6 மணிக்கு பின் வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்களுடன், வாக்குச்சாவடியின் நுழைவாயில் கதவு தாழிடப்பட்டது. பின்னா் வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தாா். இதில் 24 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 54 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் ஈபிபி நகா் வாக்குச்சாவடியில் மட்டும்தான் இறுதி நேரம் கடந்து டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்ததாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவு
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 183 வேட்பாளா்கள் போட்டி; 27.44 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா்!
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

அமைச்சா் துரைமுருகன் குடும்பத்துக்கு ரூ.74.17 கோடி சொத்து; ரூ.15.31 கோடி கடன்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


