தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பிரிட்ஜ் வாங்க போகிறீர்களா..?

பிரிட்ஜ் பராமரிப்பு: நீடித்த சேவை, சிறந்த பயன்பாடு

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 6:30 pm

பிரிட்ஜ்ஜை வாங்கிய பிறகு கவனமாகப் பராமரித்தால், பல ஆண்டுகள் நன்றாக உழைக்கும். எப்படி பராமரிப்பது என்று சில பயனுள்ள

குறிப்புகள்:

பிரிட்ஜில் காற்றோட்டம் உள்ள அறையில் வைக்க வேண்டும். சமையல் அறையில் வைக்கக் கூடாது .

வெப்பத்தை அதிகமாக வெளியிடும் ஏ.சி., அயர்ன் பாக்ஸ் போன்றவற்றுக்கு அருகில் பிரிட்ஜ் வைக்கக் கூடாது.

ப்ரீசரில் உள்ள ஐஸ் கட்டிகளை எடுக்க வரவில்லை என்றால் கத்தியைக் கொண்டு எடுக்காமல் பழைய காஸ்கட்டை அதன்மேல் போட்டு வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பை தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுகளை வைத்தாலும் சுலபமாக எடுக்கவரும்.

உலர்ந்த துணியில் துடைக்க வேண்டும்.

சூடான பொருள்களை பிரிட்ஜ் உள்ளே வைக்கக் கூடாது .

பிரிட்ஜில் அவ்வளவாக பொருள்கள் இல்லை என்று அடிக்கடி நிறுத்தி விடக்கூடாது .

பிரிட்ஜ் வடிவமைக்கும்போதே இன்பில்ட் ஸ்டெபிலைசர் அமைத்திருந்தாலும் அது மின்சாரத்தின் ஏற்ற இறக்கத்தை அத்தனை பக்குவமாகச் சமாளிக்காது .அதனால் தரமான ஸ்டெபிலைசர் பொருத்துவது நல்லது.

கொத்தமல்லி, கறிவேப்பிலையை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்துக்குப் பசுமை மாறாமல் இருக்கும்.

தக்காளியை ஒரு வாரத்துக்கு வைக்கலாம்.

கேரட்டை நன்கு கழுவி தலைப்பாகத்தை நறுக்கி விட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு இரண்டு வாரம் வரை வைக்கலாம்.

காய்கறி டிரே யின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து அதில் பச்சை காய்களை பாதுகாத்தால் வெகு நாட்கள் அழுகாமல் இருக்கும்.

பூக்களை வைக்கும் முன் அவற்றை ஈரத்து வாலையால் சுற்றி பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்க வேண்டும்.

திராட்சையை கழுவாமல் வைத்து ஆறு நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

பைனாப்பிள் நன்றாக பழுத்த பிறகு ஐந்து நாள்கள் வரை வைக்கலாம்.

பிரிட்ஜில் வைக்கக் கூடாத பொருள்கள் சில இருக்கின்றன. கடையில் வாங்கி வரும் முழு முலாம்பழத்தை அப்படியே வைத்தால் சில சத்துகள் போய்விடும். நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலத்தின் பையிலோ போட்டு வைக்கலாம். இதேபோல அன்னாசிப் பழம், கிவி பழம், பலாப்பழம், மாங்காய் போன்றவற்றையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது வெங்காயம், பூண்டு, உருளைக்

கிழங்கு பூசணிக்காய் போன்றவை காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.