மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிங்கப்பூர் போறீங்களா? சுயிங்கம் எடுத்துச் செல்ல தடை! முக்கியமான 10 தடைகள்!

சிங்கப்பூர் செல்வர்கள் சுயிங்கம் எடுத்துச் செல்லக்கூடாது, மேலும் முக்கியமான 10 தடைகள் பற்றி..

News image

சிங்கப்பூர் பயணம் - ENS

Updated On :14 மார்ச் 2026, 7:27 am
Updated On :14 மார்ச் 2026, 7:27 am

கோடை விடுமுறை வரவிருக்கும் நிலையில், பலரும் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுக்கொண்டிருப்பார்கள். அதில் முதல் இடத்தில் சிங்கப்பூர் இருக்கலாம்.

சுத்தமான நாடு, இந்தியர்களுக்கு ஏற்ற இடம், உலக சுற்றுலாப் பயணிகளை இருகரம் கூப்பு வரவேற்கும் நாடாக இருக்கும் சிங்கப்பூரில் சில விஷயங்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.

வெளிநாட்டினராக இருந்தாலும் தங்களது நகரை சுத்தமாக பராமரிக்க சில கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அங்கு விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகளை அறிந்துகொண்டு சிங்கப்பூர் சென்றால், எந்த அபராத விதிப்பு போன்ற சங்கடங்களிலும் சிக்கிக் கொள்ளாமல், இனிதே சுற்றுலாவை முழுமையாக அனுபவித்துவிட்டு வரலாம் என்பதே, அங்குச் சென்று திரும்பியவர்கள் சொல்லும் தகவல்.

1புகைபிடிக்கத் தடை

சிங்கப்பூரின் பெரும்பாலான பொதுவிடங்களில் புகைபிடிக்கத் தடை உள்ளது. பூங்காக்கள், வணிக நிறுவனங்கள், பேருந்து நிறுத்தங்கள், உணவகங்களில் புகைபிடிக்கக் கூடாது. பல இடங்களில் புகைபிடிக்க வென ஒரு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அங்குமட்டும் புகைபிடிக்கலாம். மீறினால் அபராதம்.

2முக்கியமான தடை.. சுயிங்கம்

Listicle image

ANI

சிங்கப்பூரில் சுயிங்கம் போன்ற வாயில் மென்று துப்பும் பபிள்காம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுயிங்கம் விற்பனை, இறக்குமதி செய்வது தவறு. வெளிநாட்டினர் பையில் வைத்திருந்தாலும் குற்றமாகக் கருதப்படும். பொதுவிடங்கள், பேருந்துகள், கழிப்பறைகளில் சுயிங்கம்களை ஒட்டிச் செல்வதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டைக் குறைக்க பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த தடை விதிக்கப்பட்டது.

3எச்சில் துப்ப..

வெளியில் எங்கும் எச்சில் துப்பக்கூடாது. மீறினால் அபராதம். அது மட்டுமல்லாமல், சிகரெட் துண்டோ, சாக்லெட் பேப்பரோகூட கீழே விழக்கூடாது. விழுந்தால் அதிகபட்ச தொகை அபராதமாக வசூலிக்கப்படும். தொடர்ந்து தவறை செய்பவர்களுக்கு சமூக சேவை செய்ய தண்டனை விதிக்கப்படும்.

4டிப்ஸ் வழக்கம் இல்லை

Listicle image

ENS

சிங்கப்பூர் உணவகங்களில் டிப்ஸ் கொடுக்கக் கூடாது. தடை என்று இல்லை. உணவுக் கட்டணத்துடன் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். அங்கு யாரும் டிப்ஸ் எதிர்பார்க்க மாட்டார்கள். விருப்பப்பட்டால் கொடுக்கலாம். ஆனால் அவசியமில்லை.

5போதைப் பொருள்களுக்குத் தடா

Listicle image

ANI

உலகிலேயே போதைபொருள்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. சில போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருந்தாலும் கடுங்குற்றம். எனவே, தடை செய்யப்பட்ட எந்தப் பொருளையும் கொண்டு செல்ல வேண்டாம்.

6வரிசையில் நிற்க வேண்டும்

Listicle image

ANI

ஒழுங்குமுறையை பின்பற்றுவதில் சிங்கப்பூர் மக்கள் பெயர்போனவர்கள். வரிசையில் நிற்பதை சரியாகக் கடைப்பிடிப்பார்கள். டேக்ஸி நிறுத்தங்கள், பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் என அனைத்திலும் வரிசை. வரிசையில் புகுவது, பிரேக் செய்வது கடுங்கோபத்தை விளைவிக்கும்.

7சாலை விதிகள்

Listicle image

REUTERS

கண்ட இடங்களில் எல்லாம் சாலையைக் கடக்கக் கூடாது. அபராதம் விதிக்கப்படும். சிலர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள். மேம்பாலங்கள், வெள்ளைக்கோடு, சிக்னல் பகுதிகளில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். சாலை வெறிச்சோடினாலும் கூட இது பொருந்தும்.

8சாப்பிடவும் தடையாம்

பொதுப்போக்குவரத்து வாகனங்களில் சாப்பிடக் கூடாது. ரயில் நிலையத்துக்குள்ளும் சாப்பிடக் கூடாது. சில இடங்களில் தண்ணீர் அருந்துவும் தடை உள்ளது.

9கையைப் பிடிக்கலாம்.. கட்டிப்பிடிக்கக் கூடாது

கலாசாரத்தை கடுமையாக பின்பற்றும் சிங்கப்பூரில் ஒருவருக்கு ஒருவர் கையைப்பிடித்துக் கொண்டு செல்லலாம், ஆனால் கட்டியணைப்பது, முத்தம் கொடுப்பது தவறான செயல்.

10உடையில் கவனம்

Listicle image

ANI

கோயில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோர் முறையான உடையில் வர வேண்டும். கையில்லாத ஆடைக்குத் தடை. காலணிகளை வெளியே விட வேண்டும். சில வழிபாட்டுத் தலங்களில் சரியான ஆடை அணியாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை

இதுபோன்ற தடைகளை அறிந்துகொண்டு ஒரு நாட்டுக்குப் புறப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட பொருள்களை அறியாமலும் கூட எடுத்துச் சென்று விட வேண்டாம். அது அபராதத்துக்கு வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.