மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமையலில் இதெல்லாம் கூடவே கூடாது..!

சமையலில் சில விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும் என்பது பற்றி..

News image

உணவும் சமையலும் - ANI

Updated On :6 மார்ச் 2026, 4:22 am

சமையல் செய்யும்போது, உடல்நலனைக் கெடுக்கும் சில விஷயங்களில் நம் முன்னோர் மிகக் கவனமாக இருந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் வெந்ததும் வேகாததுமாகச் சாப்பிடுவதில்தான் இளம்தலைமுறை கவனமாக இருக்கிறது.

ஆனால், சமையலில் சில விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் குடும்பத்துக்காக சமைக்கும்போது இதையெல்லாம் கவனத்தில் கொண்டு சமைத்தால் நல்லது.

ரசம் அதிகமாகக் கொதிக்கக் கூடாது.

காபிக்கு பால் நன்றாகக் காயக் கூடாது.

மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக் கூடாது.

கீரைகளை மூடிப் போட்டு சமைக்கக் கூடாது.

காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.

சூடாக இருக்கும்போது, எலுமிச்சம்பழம் பிழியக் கூடாது.

தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக் கூடாது.

ஃபிரிட்ஜில் வாழைப் பழம், வெங்காயம், உருளைக் கிழங்கு, முட்டையை வைக்கக் கூடாது.

பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாகக் காயக் கூடாது.

தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாகக் கொதிக்கக் கூடாது.

குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக் கூடாது.

குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக் கூடாது.

புளி கொதிக்கும் முன் ரசத்துக்கு பெருங்காயம் சேர்க்கக் கூடாது.

பருப்பு சேர்த்ததும் சாம்பார் அதிக நேரம் கொதிக்கக் கூடாது.

பால் இல்லாத தேநீருக்கு தேயிலை தூள் அதிக நேரம் கொதிக்கக் கூடாது.

கோழிக்கறியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது.

வெங்காயத்தை நறுக்கி வெளியில் அதிக நேரம் வைக்கக் கூடாது.

-நாகஜோதி கிருஷ்ணன், சேப்பாக்கம்.

Summary

About some things that need to be handled carefully in cooking..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.