லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேர்க்கடலை முறுக்கு

வேர்க்கடலையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

News image

முறுக்கு

Updated On :3 ஆகஸ்ட் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு 200 கிராம்

வேர்க்கடலைப் பருப்பு 100 கிராம்

உளுத்தம் மாவு, பெருங்காயப் பொடி தலா 1 மேசைக்கரண்டி

எள் 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் 2 மேசைக்கரண்டி

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர், தண்ணீரைவடிகட்டி வேர்க்கடலையைப் பருப்பை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அத்துடன் அரிசி மாவு, உளுத்தம் மாவு, எள், பெருங்காயத் தூöள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து, கொஞ்சமாக எடுத்து ஒரு வெண்ணெய்ப் பேப்பரில் முறுக்குகளாகப் பிழிய வேண்டும்.

வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கரண்டியால் முறுக்கை எடுத்து எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.