முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது கடலைமாவைச் சேர்த்து பசையாக்கி முகத்திலும் கழுத்திலும் நன்றாகத் தடவி சிறிது நேரம் ஊறியவுடன், குளிர்ந்த நீரில் அலம்பினால் வாடிய தோல் நாளடைவில் புது மெருகு பெறும். எண்ணெய் பசை இல்லாமல் உலர்ந்த முகம் உடையவர்கள் மஞ்சள் கருவை எடுத்து அத்துடன் பாலாடையும் பன்னீரையும் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் நன்றாகத் தடவி சிறிது நேரம் ஊறியவுடன் முகத்தை இளஞ்சூடான வெந்நீரில் அலம்பினால் தோல் பளபளப்பாக இருக்கும்.
மஞ்சள் கருவை முகத்திலும் கழுத்திலும் தடவி ஊறியவுடன் வெள்ளை கருவுடன் சிறிது கிளிசரின் பன்னீர் ஆகியன கலந்து தடவி சிறிது நேரம் ஊறிய பச்சை தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். நாளடைவில் சுருக்கம் மறைந்து விடும்.
பாதாம் பருப்புகளைத் தோல் உரித்து நன்றாக அரைத்து வெள்ளைக் கருவையும் சில சொட்டு எலுமிச்சம்பழச் சாற்றை கலந்து முகத்தில் தடவி ஊறியவுடன் முகத்தை அலம்பினால் முகத்தில் உள்ள புள்ளிகள் மறைந்துவிடும்.
வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்று, கருமையாக அடர்த்தியாக வளரும்.
வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சம்பழத்தைக் கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் பொடுகு மறையும். பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளைக் கருவை தேய்த்து குளிக்க வைத்தால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காது. குழந்தையின் நிறமும் பொன்னிறமாக இருக்கும்.
வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவினால் முகத்தில் பருக்கள் மறைந்து, நல்ல மாற்றம் ஏற்படும்.
வெள்ளைக் கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி... என முகம் முழுவதும் நன்றாகத் தடவி, நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தேவையற்ற ரோமங்கள் முளைக்காது.
சருமத்தில் கருப்புத் திட்டு போன்ற புள்ளிகள் தென்பட்டால் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர், கால் மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் அந்தப் பாதிப்பு நீங்கிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

முகத்தில் எண்ணெய்ப் பசை வழிகிறதா?

முகத்தில் எண்ணெய்ப் பசை வழிகிறதா?
ராகுல் காந்தியை சந்திக்க நான் முகத்தை மூடிச் செல்லவில்லை: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

