மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முட்டை வெறும் சாப்பிடும் உணவு மட்டுமல்ல.. அழகுப் பொருளும் கூட!

முட்டை வெறும் சாப்பிடும் உணவுப்பொருள் மட்டுமல்ல அழகுப் பொருள் என்பது பற்றி..

News image

முட்டையின் பயன்கள் - ENS

Updated On :7 மார்ச் 2026, 11:20 am

முட்டை வெறும் சாப்பிடும் உணவு மட்டுமல்ல, அதனை தலை மற்றும் முகத்துக்கான அழகுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

பலரும் முட்டையை உரிய முறையில் பயன்படுத்தி நல்ல பொலிவான முகம் மற்றும் தலைமுடியைப் பெறுகிறார்கள்.

நாமும் அதனைப் பின்பற்றுவோம்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது கடலைமாவைச் சேர்த்து பசையாக்கி முகத்திலும் கழுத்திலும் நன்றாகத் தடவி சிறிது நேரம் ஊறியவுடன், குளிர்ந்த நீரில் அலம்பினால் வாடிய தோல் நாளடைவில் புது மெருகு பெறும்.

மஞ்சள் கருவை முகத்திலும் கழுத்திலும் தடவி ஊறியவுடன் வெள்ளை கருவுடன் சிறிது கிளிசரின் பன்னீர் ஆகியன கலந்து தடவி சிறிது நேரம் ஊறிய பச்சை தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். நாளடைவில் சுருக்கம் மறைந்து விடும்.

பாதாம் பருப்புகளைத் தோல் உரித்து நன்றாக அரைத்து வெள்ளைக் கருவையும் சில சொட்டு எலுமிச்சம்பழச் சாற்றை கலந்து முகத்தில் தடவி ஊறியவுடன் முகத்தை அலம்பினால் முகத்தில் உள்ள புள்ளிகள் மறைந்துவிடும்.

வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சம்பழத்தைக் கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் பொடுகு மறையும்.

பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளைக் கருவை தேய்த்து குளிக்க வைத்தால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காது. குழந்தையின் நிறமும் பொன்னிறமாக இருக்கும்.

வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்று, கருமையாக அடர்த்தியாக வளரும்.

வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவினால் முகத்தில் பருக்கள் மறைந்து, நல்ல மாற்றம் ஏற்படும்.

வெள்ளைக் கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி... என முகம் முழுவதும் நன்றாகத் தடவி, நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தேவையற்ற ரோமங்கள் முளைக்காது.

சருமத்தில் கருப்புத் திட்டு போன்ற புள்ளிகள் தென்பட்டால் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர், கால் மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் அந்தப் பாதிப்பு நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.