தேவையான பொருள்கள்:
பச்சரிசி 1 கிண்ணம்
நெய் தேவையான அளவு
சர்க்கரை 1 கிண்ணம்
துருவிய தேங்காய் 2 மூடி
வெல்லம் 1/2 கிலோ
உலர் திராட்சை 1/4 கிண்ணம்
முந்திரிப் பருப்பு 1/4 கிண்ணம்
ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் கொட்டி 2 மணி நேரம் காய வைக்கவும். பின்னர், அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து, மெல்லிய சல்லடையால் சலித்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி, சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பான நீரில் சப்பாத்தி மாவு போல பிசைந்து எடுத்தால் அடை மாவு தயார்.
இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் பாதியளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துற், பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதை வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். அடை நன்கு வெந்ததும் வெளியே எடுத்து ஆறியதும் இலையிலிருந்து அடையை தனியாக எடுத்து, சின்ன சின்ன துண்டுகளாக செய்யவும்.
தேங்காயை, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் 1/4 கிண்ணம் முதல் பால், 1/2 கிண்ணம் இரண்டாம் பால், 2 கிண்ணம் மூன்றாம் பால் என எடுத்து வைத்துக்கொள்ளவும். வானிலை அடுப்பில் வைத்து அதில் 1/4 கிண்ணம் நெய் ஊற்றி தயாரித்து வைத்த அடையை பொரித்து எடுக்கவும். வேறொரு பாத்திரத்தில், வெல்லம், சர்க்கரை மற்றும் மூன்றாவது தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க வைத்து பின்பு, இரண்டாம் பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்து, முதல் பாலை ஊற்றி அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கலந்து, ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


