முதல்வராக 5 ஆண்டுகால பணிகள் குறித்து விடியோ வெளியிட்டு மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஏப்.23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என் மேலே நம்பிக்கை வைத்து என்னை முதல்வராக்கி ஐந்து ஆண்டுகள் ஆகிருக்கின்றன. சிஎம் சார் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருந்து என்ன செய்தீர்கள் என்று கேட்டால், மணி கணக்காக, ஏன் நாள் கணக்காகக்கூட பேச முடியும்.
எப்போதுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்திருப்பதை என்னால் இன்னும் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். சமூக நீதியுடன்கூடிய வளர்ச்சி என்பதுதான் நம்முடைய முதன்மையான குறிக்கோள்.
அந்த வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்துப் பயணம், தோழி மகளிர் விடுதி, மக்களைத் தேடி மருத்துவம் என கருவில் இருக்கும் குழந்தையில் இருந்து வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் வரைக்கும் எல்லோரும் பயனடைகின்ற வரையில் நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்தோம்.
நம்ம கிட்ட காசு இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள், நிலம் இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், ஆனால் படிப்பை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. கல்வி ஒன்றுதான் யாரும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாத சொத்து.
நான் பதவியேற்றத்திலிருந்து மாணவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், இதே கருத்தைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கல்வி ஒன்றுதான் யாரும் திருட முடியாத ஒரே சொத்து” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க... தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
Summary
M.K. Stalin has issued a video explaining his work during his five-year tenure as Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


