பிரம்புச் சாமான்களை எலுமிச்சைச் சாறு கொண்டு தேய்த்து துடைத்தால் அவை புதுப்பொலிவு பெறும்.
ஆடையில் சுயிங்கம் ஒட்டிக் கொண்டால், ஐஸ் கட்டி மூலம் அங்கு தேய்த்தால் போதும். எளிதில் வந்துவிடும்.
சுவர்களில் உள்ள ஓட்டைகளைப் பற்பசையைக் கொண்டு அடைக்கலாம். பற்பசை நன்கு காய்ந்தவுடன் சுவரின் நிறத்தையே அந்தப் பற்பசையின் மீது அடித்தால் ஓட்டையைத் தேடினாலும் கிடையாது.
துணியில் மருதாணிக் கறை பட்டிருந்தால், அதை வெதுவெதுப்பான பாலில் அரைமணி நேரம் ஊற வைத்துப் பின்னர் சோப்பு போட்டு அலசுங்கள். சரியாகிவிடும்.
அவசரத்துக்கு வெள்ளியினாலான பொருள்களைப் பளபளப்பாக்க வேண்டுமானால் கொஞ்சம் பற்பசையை தேய்த்து துணியால் துடைத்தால் போதும். கறுப்பு மறைந்துவிடும்.
பழங்களுடன் ஸ்டார்ச் அதிகமுள்ள உணவு (உருளைக்கிழங்கு போன்றவற்றை) உண்டால் இரண்டுக்கும் உள்ள ஜீரணிக்கும் நேர வித்தியாசத்தால் பாதிப்புகள் உண்டாகும்.
மாமிசத்தையும் பாலையும் சேர்த்து உண்ணக் கூடாது. மாமிசம் சூட்டை அதிகரிக்கும். உணவு, பால் உடலை குளிர்விக்கும். இரண்டும் பொருந்தாதவை. ஜீரண அக்னி பாதிக்கப்படும்.
முலாம் பழத்தையும் பாலையும் சேர்த்து உண்ணக் கூடாது. இரண்டும் குளிர்ச்சியானவை. ஆனால், பால் மலமிளக்கி. முலாம்பழம் சிறுநீரைப் பெருக்கும். பால் ஜீரணிக்க நேரமாகும். வயிற்றில் திரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


