வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தர்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகவும், முத்துகுமார சுவாமி, தன்வந்திரியும் தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகரத்தார் குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது.
காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி,திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்றி வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக வந்து தங்கள் குலதெய்வமான தையல்நாயகியை வழிபடுவது வழக்கம்.
சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்துப் பூஜித்து பாதயாத்திரை துவங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோயில் கொடிமரத்தில் செலுத்துகின்றனர். பின்னர் அம்பாள் மற்றும் சுவாமியை தரிசித்து வழிபடும் நகரத்தார் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காகக் கொடிமரத்திலிருந்து மாற்றுக் குச்சியை எடுத்துச் செல்வதும் இம்மக்களின் வழக்கமாக உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.
Summary
The worship of the family deity by the Nagarathars of Vaitheeswaran Koil was celebrated with great grandeur today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு
வந்தாச்சு கிளைமாக்ஸ்...

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



