அமரி கன்மான்
கடலையை நன்றாக ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்து அரைப் பதமாகவும் கெட்டியாகவும் அரைக்க வேண்டும்.


தேவையானவை;
கொண்டைக்கடலை- 500 கிராம்
பால்- 100 மி.லி.
பச்சை மிளகாய்- 15
இஞ்சி- 1 சிறிய துண்டு
பூண்டு- 15 பற்கள்
கடுகு- 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி
சர்க்கரை- 25 கிராம்
எலுமிச்சம் பழம்- பாதியளவு
கொத்தமல்லி- 1 பிடி
தேங்காய்- 1 மூடி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கடலையை நன்றாக ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்து அரைப் பதமாகவும் கெட்டியாகவும் அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் கடுகு தாளித்து அரைத்த கடலை, பெருங்காயம் சேர்த்து கிளற வேண்டும். எண்ணெய் முழுவதும் வற்றியவுடன் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். பாலை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி ஒட்டாமல் வரும்போது, கீழே இறக்கி ஒரு அகலமான தட்டில் பரவலாகக் கொட்டி கொத்தமல்லி தேங்காய்த் துருவலை அதன் மேல் தூவிர் பரிமாறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...