லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விரல் நகங்களை அழகுபடுத்த..!

நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறையும்.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 1:49 pm


நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணி
யுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறையும்.

நகங்களைச் சுற்றி தடித்து வலி இருந்தால் வெதுவெதுப்பான நீரில் டெட்டால் பெப்பெர்மின்ட் ஆயில் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவினால் வலி நீங்கும். நகமும் சுத்தமாகும்.

ஆலிவ் எண்ணெயை லேசாகச் சூடாக்கி, விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்து கட்டினால்,  நகத்தைச் சுற்றி வளரும் நகச்சுத்தி குணமாகும்.

முருங்கைக் கீரை, பப்பாளி, மாம்பழம், பேரிச்சம் பழம் போன்ற உணவுகள் நகத்தைப் பாதுகாக்க உதவும்.

வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் நிறைந்தது) இரண்டு தேக்கரண்டி எடுத்து, நான்கு தேக்கரண்டி சூடான நீரில் கரைத்து விரல்களின் மீது பூசி தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் நகங்கள் உடையாமல் வலிமை கொண்டதாக மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.