லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல் குறிப்புகள்...

பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 4:11 pm

பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.

கொத்துமல்லி இலை நீண்ட நாள்கள் புதியதாக இருக்கும்படி வைக்க, அவற்றை வாழை இலையில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் போதும்.

கிண்ணத்தில் படிந்துள்ள காபி, டீ கறைகளை நீக்க உப்புத் தூளைத் தேய்த்து கழுவினால் போதும்.

உருளை, சேனைக் கிழங்குகளை ரோஸ்ட் கறி செய்யும்போது, கடைசியில் ரஸ்க் தூளைக் கொஞ்சம் தூவி ஒரு புரட்டினால் போதும். கறி நன்கு சுவை மிகுந்திருக்கும்.

 ரவா உப்புமா மீதமாகிவிட்டால், அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.