அடைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து, மெல்லிய அடைகளாக வார்க்க வேண்டும். மிதமான புதினா வாசனையில் மிகவும் சுவையாக இருக்கும்.
சாம்பார் செய்ய துவரம் பருப்பு மட்டும் பயன்படுத்தாமல், சம அளவு பாசிப் பருப்பை சேர்த்து பயன்படுத்தினால் சாம்பார் சுவையாக இருக்கும்.
அவலை நீர் சேர்த்து ஊறவைக்கும்போது கொஞ்சம் மோர் சேர்த்துக் கொண்டால் கார அவல் டிஷ் சுவை இரு மடங்காகும். எளிதில் ஜீரணமாகும்.
பாகற்காய் கூட்டு, குழம்பு செய்யும்போது அரை டம்ளர் தேங்காய் பால் சேர்த்து கொண்டால் கசப்புநீங்கும்.
சமைத்த பாத்திரத்தில் இருந்து நேரடியாக உணவை உண்ணக் கூடாது.
தலை பாரமாக இருக்கிறதா? நொச்சி இலையை உப்பு போட்டு வதக்கி, இளஞ்சூட்டுடன் நெற்றியில் புற்றுபோல் போட்டுக் கொண்டால், உடனே சரியாகிவிடும்.
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மார்புச் சளி கட்டிக் கொள்ளும். இதற்கு துளசி கஷாயம் கொடுத்தால் ஆரோக்கியம் அடையலாம்.
பாதாம், பிஸ்தா போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பிகளில் போட்டு வைப்பதற்குப் பதிலாக, கண்ணாடி ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து குலுக்கி வைத்தால் நீண்ட நாள்களுக்குத் தடித்து போகாது.
தொகுப்பு : உ.ராமநாதன், ஆர்.கே.லிங்கேசன், பத்மஜா, அ.ப.ஜெயபால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரிக்கெட்டுக்கு நடுவில் சுழல் காற்று! சிதறி ஓடிய இளைஞர்கள்! | Coimbatore

பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு நடிகைகள் இணையும் மகா சங்கமம்!
கொல்கத்தாவில் மமதா இறுதிக்கட்ட பிரசாரம்! நடந்து சென்று வாக்கு சேகரிப்பு!
ஜார்க்கண்டில் எந்தவொரு வாக்காளரையும் நீக்க காங்கிரஸ் அனுமதிக்காது!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


