தேவையானப் பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1 கிண்ணம்
மிளகு - 1/2 தேக்கரண்டி
தனியா - 1/2 தேக்கரண்டி
ஓமம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் -1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய் பொடி-1/4 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
முருங்கை கீரையில் உள்ள குச்சிகளை நீக்கி, இலைகளை தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். முருங்கை இலைகளை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். கோதுமை மாவை தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். மிளகு, தனியா, ஓமம் சீரகம் ஆகியவற்றை மிக்சியில் இட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த கலவையை சேர்த்து கிளறி, வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய் , மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, முருங்கைக்கீரை, உலர்ந்த மாங்காய் பொடி , உப்பு சேர்த்து நன்றாக வெந்தவுடன் இறக்கிவிடவும்.
பிசைந்து வைத்த கோதுமை மாவை உருண்டைகளாக உருட்டி, சிறிது தடிமனாக தேய்த்து, நடுவில் சிறிது முருங்கை இலை கலவையை வைக்க வேண்டும். மீண்டும் அதை உருண்டையாக பக்குவமாக உருட்டி, சப்பாத்திக் கட்டையால் மிருதுவாக இட்டு, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை இருபக்கமும் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்தால் முருங்கை பரோட்டா ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


