சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாங்காய் கொத்சு

மாங்காயை நன்றாக அலம்பி வட்டவட்டமாகத் தோலுடன் நறுக்க வேண்டும். அடிகனமான பாத்திரம் ஒன்றில் தேவையான தண்ணீர்விட்டு, நறுக்கிய மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு மூடி வேக

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:56 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை: 

மாங்காய்-2
வெல்லம்- 200 கிராம்
மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி
கடுகு- அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 3
பச்சை மிளகாய்-3
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

மாங்காயை நன்றாக அலம்பி வட்டவட்டமாகத் தோலுடன் நறுக்க வேண்டும். அடிகனமான பாத்திரம் ஒன்றில் தேவையான தண்ணீர்விட்டு, நறுக்கிய மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு மூடி வேக வைக்க வேண்டும். வெந்த மாங்காயில் கரைத்த வெல்லத்தைவிட்டு அரிசி மாவை கரைத்துவிட்டு, பதமானவுடன் கீழே இறக்க வேண்டும். எண்ணெயை நன்றாகக் காய வைத்து, கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் போட்டுச் சிவந்தவுடன் இதை கொத்சுவில் விட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.