நான்கு ஓமவல்லி இலை, சிறிய துண்டு சுக்கு, ஐந்து நல்ல மிளகு, கருப்பட்டி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து குடித்துவர ஜலதோஷம் குணமாகும்.
தூக்கமில்லாது அவதிப்படுவோர் சிறிது சீரகத்தை வறுத்து பொடியாக்கி, ஒரு செவ்வாழைப் பழத்துடன் இரவு சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.
கொத்தமல்லி விதைகளை லேசாக வறுத்து, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கிறுகிறுப்பு மாறும்.
-ஆர்.ராதிகா
சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால், நிவாரணம் கிடைக்கும். சுக்கு, பனை வெல்லம், உளுந்து ஆகியவற்றை சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால், உடலுக்கு பலமுண்டாகும்.
மாதவிடாய் தள்ளிப் போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி. எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையில் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து அதில் ஓர் தேக்கரண்டியைத் தேனில் குழைத்து 10 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பிரச்னை சரியாகும்.
மழை, குளிர்காலத்தில் கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப் பூவைப் போட்டு, வடிகட்டி பருகினால் சுவாசம் எளிதாகும். தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப் பூப்பொடி சேர்த்தால் சோர்ந்திருக்கும் மூச்சுக் குழாய் உற்சாகமடையும்.
பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி துண்டுகள், வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், பொடித்த அன்னாசிப் பூ போன்றவற்றை நெய்யில் வதக்கி உணவாகச் சாப்பிட்டால், கப நோய்களை எதிர்த்து நிற்கும் வன்மையை உடலுக்கு அளிக்கும்.
தொண்டை கரகரக்கும்போது, சிற்றரத்தையை நெருப்பில் எரித்து அதை தேனில் குழைத்து அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் தவழும்படி சாப்பிட்டால் கரகரப்பு கரைந்து தொண்டை இதமாகும்.
ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம் பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை சூடாக சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


