சிலம்பம்: அம்மாவின் ஆசை!
மக்கள் தம்மை விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள கையாண்ட முறையே பின்னாளில் "சிலம்பம்' கலையாக வளர்ந்துள்ளது என்று சொல்லுவதுண்டு.


மக்கள் தம்மை விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள கையாண்ட முறையே பின்னாளில் "சிலம்பம்' கலையாக வளர்ந்துள்ளது என்று சொல்லுவதுண்டு. சிலம்பம்எல்லாப் பாகங்களுக்கும் தேவையான புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட சிலம்பப் போட்டியில் திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில்படிக்கும் இரண்டு மாணவிகள் சாதனைப்
படைத்து வருகின்றனர் அவர்கள்நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
ரா. புவனேஸ்வரி கூறியதாவது:
""என்னுடைய அம்மாவிற்கு மிகவும் பிடித்தது சிலம்பம். ஆனால் அந்நேரத்தில் ஊக்குவிப்பதற்கு ஆட்களும் இல்லையாம், அதனால் நான் எப்படியாவது சிலம்பத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் கொடுத்து வருகிறார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகர்கோயிலில் இந்திய சிலம்ப குருகுலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய 10-வது மாநில அளவிலான போட்டியில் வெற்றிப் பெற்று மூன்று பதக்கங்களை கைப்பற்றினேன்.
அதைத் தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்றேன்.
2015-ஆம் ஆண்டில் மூன்றாவது உலக சிலம்ப போட்டி மலேசியாவில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண'டு புதுவித அனுபவமும் சான்றிதழும் பெற்றேன். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பெற்ற பாரதியார் பிறந்தநாள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு 2-ஆம் பரிசு பெற்றேன்.
இதற்கெல்லாம் உறுதுணையாக இருக்கும் முதல்வர் முனைவர்.எம்.வாசுகி மற்றும் பயிற்சியாளரின் அரவணைப்பு அடுத்த நிலைக்கு கொன்டு செல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார்.
வா.பரமேஸ்வரி கூறியதாவது:
""நான் தமிழ் இலக்கியம் முதலாமாண்டு படிக்கிறேன். ஒவ்வொரு பெற்றோருக்கும், தன்னுடைய மகள் ஏதாவது சாதனை புரிய மாட்டாரா? என்ற கனவு இருக்கும். அந்த கனவை நிஜமாக்குவது நம்முடைய கடமை. எனது தாய் அங்கன்வாடி பணியாளர் மழலைச் செல்வங்களுக்கு எது போன்ற ஊட்டச்சத்து உணவுகளை கொடுக்க வேண்டும், குழந்தைகளை எப்படி அன்போடு, பண்போடு வளர்க்க வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு கை வந்த கலை. அதே மாதிரி தான் என்னையும் வளர்க்கின்றார்.
நான் சிலம்பு சுற்றினால் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகமாக ஊட்டியவர் என்னுடைய ஆசான் சுரேஷ்குமார்தான். இதனால் கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உலக சாதனை சிலம்பப் போட்டியில் ஒரே இடத்தில் நின்று 5 மணிநேரம் 55நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தேன். இனிவரும் காலங்களிலும் இச்சாதனையை முறியடித்து அடுத்த இலக்கை நோக்கி பயணிப்பேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...