மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி நீங்கும்.
பெண்கள் நகத்தில் அரைத்துப் பூசுவது அழகுக்கு மட்டுமின்றி, உடல் வெப்பத்தைத் தணிக்கவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது.
பூக்களை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாய மாக்கி வடிகட்டி தலைக்குக் குளித்தால் தலைவலி நீங்கும்.
மருதாணி இலையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தேய்த்துவர இளநரை நீங்கி தலைச் சூடு குறைந்து தலைமுடி. செழித்தும், நீண்டும், செம்பட்டையின்றியும் வளரும்.
இலைகளை எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து கை, கால், மூட்டு வலி, கீழ்வாத வலியின் போது தேய்க்க நல்ல குணம் தெரியும்.
ஒரு கைப்பிடி மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து கால் பாதத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ பாத எரிச்சல் நீங்கும். பாதமும் மென்மையாக இருக்கும்.
ஒரு கைப்பிடி இலைகளோடு 1 தண்டு விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் இரவில் தடவி, காலையில் கழுவி வர, நமைச்சல், ஊறல் படிப்படியாகக் குறையும்.
இலைகளை அரைத்து நீண்ட நாள் ஆறாத புண் மீது வைத்துக் கட்ட விரைவில் ஆறும்.
ஒரு கைப்பிடி இலையை மஞ்சள், வசம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து கால் ஆணிமேல் வைத்து வெற்றிலை வைத்து கட்டிவர 15 நாட்களில் கால் ஆணி மறையும்.
மருதாணிப் பூக்களை (புதியவை) தலையணையின் அடியில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.
மருதாணியின் உலர்ந்த விதைகளை சாம்பிராணியுடன் சேர்த்து தணலில் புகையவிட்டால், பில்லி, சூன்யம், ஏவல், கண் திருஷ்டி நீங்கும். கொசு, விஷப் பூச்சிகள் அண்டாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மண்ணச்சநல்லூா்! சமபலத்தில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


