உலகைச் சுற்றி வருவேன்!
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜாரா ரூதர் ஃபோர்ட் ( 19) தனது சிறிய விமானம் மூலம் தன்னந்தனியாக உலகை சுற்றி வரும் பயணத்தை தொடங்கியுள்ளார்.


பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜாரா ரூதர் ஃபோர்ட் ( 19) தனது சிறிய விமானம் மூலம் தன்னந்தனியாக உலகை சுற்றி வரும் பயணத்தை தொடங்கியுள்ளார். பெல்ஜியத்தில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தன் பயணத்தைத் தொடங்கி, தற்போது பறந்து கொண்டிருக்கும் ஜாரா, நவம்பர் 4-தேதிக்குள் 52 நாடுகளுக்கு மேல் பறந்து மீண்டும் பெல்ஜியத்திற்கு திரும்பும் திட்டத்தில் இருக்கிறார். இந்த பயணத்தில் அவர், 70 இடங்களில் தங்கியும், 19 நாள்கள் ஓய்வும் எடுத்துக் கொள்ளவிருக்கிறார். இவர், தனது பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், உலகத்தை சுற்றி வந்த மிகவும் சிறிய பெண் என்ற பெருமை இவரைச் சேரும்.
இது குறித்து ஜாரா கூறுகையில், ""உலகம் முழுவதும் தனியாக சுற்றி வர வேண்டும் என்பது என் கனவு. அது தற்போது நிறைவேறி உள்ளது. சிறிய ரக விமானமான மைக்ரோலைட் விமானத்தின் மூலம் இந்த உலகைச் சுற்றி வரவுள்ளேன். சுமார் 1.5 மாதங்கள் எனது பயணம் இருக்கும். இதன்மூலம், இளம் பெண்கள் தங்கள் கனவுகளைத் தொடர ஊக்குவிப்பதே எனது நோக்கம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...