/

தந்தைக்காக  ஓர்   திரைப்படம்!

ஷபனா  ஆஷ்மிக்கு வயது 70.  1974-ஆம் ஆண்டு,  ஷ்யாம்  பெனகலின், "ஆங்கூர்' படம் மூலம் ஹிந்தி  திரைப்பட உலகில்  நுழைந்தவர்.   இப்போதும்  பரீட்சார்த்த  படங்களில்  மட்டுமே நடிக்கிறார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:27 pm

ராஜிராதா


ஷபனா ஆஷ்மிக்கு வயது 70. 1974-ஆம் ஆண்டு, ஷ்யாம் பெனகலின், "ஆங்கூர்' படம் மூலம் ஹிந்தி திரைப்பட உலகில் நுழைந்தவர். இப்போதும் பரீட்சார்த்த படங்களில் மட்டுமே நடிக்கிறார்.
ஷபனாவின் தந்தை கெய்பி ஆஸ்மி மிகச்சிறந்த உருது கவிஞர். அத்துடன் அவருக்கு தனது சொந்த கிராமமான மீஸ்வனில், ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசை. அதனை ஷபனாவிடம் கூறியிருந்தார்.
தற்போது ஷபனாவின் தம்பி இயக்குநராகியுள்ளார். அவர் தயாரிக்கும்
ஙஉஉ தஅணநஅங என்ற படத்தின் மூலம், தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு நூறாவது பிறந்த ஆண்டு. அப்போது முதல் படப்பிடிப்பு துவக்கப்பட்டு நடந்து வருகிறது. ஷபனாவும் கடந்த 20 வருடங்களாக, மீஸ்வனில் உள்ள பெண்களின் நல்வாழ்வு மற்றும், முன்னேற்றத்திற்காக பல உதவிகளை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.