அமெரிக்க அரசியலில் இரண்டு இந்திய வம்சாவளிப் பெண்கள் எதிரும் புதிருமாக மோதுகிறார்கள். ஒருவர் தமிழ்நாட்டுப் பெண்மணியான அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் சார்பாக துணை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் கமலா ஹாரிஸ்.கமலா ஹாரிஸின் அதிரடியான பேச்சுக்களுக்கு குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப்பைக் குறித்து செய்யப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பவராக இருக்க வேண்டும் என இன்னொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ரந்தாவா ஹாலேவை அமெரிக்கக் குடியரசு கட்சி களம் இறங்கியிருக்கிறது.
வட இந்தியரான நிக்கியின் பெற்றோர் பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர்கள். நிக்கி பிறந்து வளர்ந்தது அமெரிக்காவில். நிக்கி சீக்கிய மதத்தை விட்டு கிறித்துவ மதத்தைத் தழுவியுள்ளார். கணவர் மைக்கேல் ஹாலே கிறித்துவ அமெரிக்கர்.
கமலாவும் -நிக்கியும் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தவர் என்று அமெரிக்காவில் கருதப்படுகிறார்கள்.
ஆனால் நிக்கி 2024 தேர்தலில் நேரடியாக அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவிக்காக தேர்தலில் போட்டியிட காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.
"டிரம்ப் துவேஷம் உள்ளவர்.. அமெரிக்காவில் நிறவெறி தலைகாட்டும் விதத்தில் ஆட்சி நடத்துபவர்.. நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்தவர்.. கரோனா தடுப்பைக் கையாளத் தெரியாதவர்..' என்று போட்டுத் தாக்கும் கமலா ஹாரிஸ் ஒரு பக்கம். ...
"அமெரிக்காவில் இன வெறி இருக்கிறது என்று சொல்வது பொய். "அமெரிக்காதான் எதிலும் முதல் இடத்தில் இருக்க வேண்டும்' என்று செயல்படும் டிரம்ப்பின் கொள்கையை தடம் புரட்டும் விதமாக ஜோ பிடன், அவர் சார்பாளர்களின் கருத்து உள்ளது. கருப்பு இன மக்கள் குறித்துப் பேசுபவர்கள் அவர்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் டிரம்ப் கறுப்பினமக்களுக்காக பல வாய்ப்புகளை வழங்கியுள்ளார். ஜோ வின் கொள்கை உலக அளவில் தோல்வி அடைந்த சோசலிசம். அது அமெரிக்காவிற்குப் பொருந்தாது' என்று அதிரடியாகப் பேசியிருக்கும் நிக்கி ஐநா சபையில் அமெரிக்க தூதுவராக பணி புரிந்தவர். தெற்கு கரோலினா மாநிலத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அரசியலில் அனுபவமுள்ள 48 வயது அரசியல்வாதி.
""இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. நாங்கள் அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான். இங்கே வந்தாலும் அப்பா சீக்கிய மதச் சின்னமான தலைப்பாகை அணிந்தார். அம்மா சேலைதான் உடுத்தினார். கருப்பு வெள்ளை நிற மக்களிடையே பழுப்பு நிறப் பெண்ணாக நான் வளர்ந்தேன். இனம் நிறம் காரணமாக எங்களுக்கு பல பிரச்னைகள் எழுந்தன. அதை எனது பெற்றோர் சமாளித்து முன்னேறினார்கள். பதிலுக்கு பிரச்னைகளை குறையாக பெரிதுபடுத்தவில்லை. பிரச்னையை உருவாக்கியவர்களுக்கு எதிராக வெறியை வளர்த்துக் கொள்ளவில்லை.
அம்மா வர்த்தகத்தில் சாதித்தார். அப்பா கல்லூரியில் பேராசிரியராக உயர்ந்தார். நான் எனது மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பழுப்பு நிறத்தவள் என்று யாரும் என்னை ஒதுக்கவில்லையே...' நிக்கியின் இந்த பேச்சு திசை திருப்பும் பேச்சா.. புதிய திசை காட்டும் பேச்சா என்பது போகபோகத்தான் தெரியும்.
" சீனாவிலும் அடக்கு முறை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அடக்கினால் புரட்சி வெடிக்கும் என்பதே வரலாறு. ஹாங்காங், தைவான், தென் சீனக் கடல், தற்போது இந்தியா என்று சீனா சீண்டி வருகிறது' என்று குற்றம் சாட்டுபவரும் நிக்கிதான்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற இந்திய வம்சாவளியினர் வாக்குகள் வெகு முக்கியமானவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


