நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சமையல் சமையல்!

சேமியாவை 3 கிண்ணம் கொதிக்கும் நீரில் போட்டு, நன்கு வெந்ததும் இறக்கி வடித்துவிடவும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

இல.வள்ளிமயில்


சேமியா ஸ்பெஷல்...

சேமியா - காய்கறி கட்லெட்
தேவையானவை:
சேமியா - அரை கிண்ணம்
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
பீட்ரூட் - 1
பட்டாணி - கால் கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1துண்டு
புதினா - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
மைதா - அரை கிண்ணம்
பிரெட் தூள் - 1 கிண்ணம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: சேமியாவை 3 கிண்ணம் கொதிக்கும் நீரில் போட்டு, நன்கு வெந்ததும் இறக்கி வடித்துவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும், 2 தேக்கரண்டி எண்ணெய்யைக் காயவைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, மல்லித் தழையைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கவும்.
பின், துருவிய கேரட், பீட்ரூட்டையும், பட்டாணியையும் சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி, மசித்த உருளைக்கிழங்கு, சேமியா, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து இறக்குங்கள்.
இக்கலவையை வேண்டிய வடிவத்தில் செய்து கரைத்த மைதாவில் நனைத்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெய்யில் பொரியுங்கள். பின், சூடாக சாஸþடன் பரிமாறவும்.

சேமியா - கீரை கட்லெட்

தேவையானவை:
சேமியா - 1கிண்ணம்
கீரை - 1 கிண்ணம் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2
பிரெட் - 2 துண்டுகள்
மைதா - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு.
பச்சை மிளகாய் விழுது - ஒன்றரை தேக்கரண்டி
மல்லித்தழை - சிறிது
எலுமிச்சம்பழச்சாறு - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: கீரையை நன்கு அலசிப் பிழிந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். சேமியாவை கொதிக்கும் நீரில் வேகவைத்து, வடித்துக் கொள்ளவும். மைதா, பிரெட்தூள், எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தேவையான வடிவங்களில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும். மைதாவை தோசை மாவு பதத்தில் வைத்து, கரைத்து, அதில் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, காயும் எண்ணெய்யில் பொரித்
தெடுக்கவும்.
 

சேமியா கோவா டிலைட்
 

தேவையானவை:
சேமியா - அரை கிண்ணம்
கோவா - 50 கிராம்
கேரட் - 1
முந்திரி பருப்பு - 10
சர்க்கரை - ஒன்றே கால் கிண்ணம்
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
வெள்ளரி விதை அல்லது
சாரைப் பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை: கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளுங்கள். சேமியாவை சிறு துண்டுகளாக்கி, நெய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து எடுங்கள். பின்னர் வேறு ஒரு பாத்திரம் வைத்து ஒன்றரை கிண்ணம் தண்ணீரை கொதிக்கவிடுங்கள், மறு அடுப்பில் ஒரு வாணலியில் நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய முந்திரியைச் சேர்த்து, அரை நிமிடம் வறுத்து, கொதிக்கும் நீரை சேருங்கள்.
அதில் வறுத்த சேமியாவை சேர்த்து நன்கு வேகவிடுங்கள், சேமியா நன்கு வெந்த பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து, மேலும், சிறிது கிளறி சர்க்கரை கோவா சேர்த்து கிளறுங்கள். சர்க்கரை நன்கு சேர்ந்து சுருண்டு வந்ததும், ஏலக்காய்த்தூள், வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.