சமையல் சமையல்!
தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, தக்காளியை வதக்கவும்.


தேவையானவை:
கோதுமை மாவு - 2 கிண்ணம்
தக்காளி - 3
மிளகாய்த்தூள் - சிறிதளவு
நறுக்கிய கொத்துமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, தக்காளியை வதக்கவும். பின்னர், வதக்கிய தக்காளியின் சூடு ஆறியவுடன், மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது, சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, சப்பாத்திக்குப் பிசைவதுப் போன்று பிசைந்து கொள்ளவும், இதை அரைமணி நேரம் ஊறவிடவும்.
பின்னர், மாவை வட்டமாகத் தேய்த்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி விசிறிக்கு மடிப்பது போல முன்னும், பின்னுமாக மடித்து, உருண்டையாகச் செய்தபிறகு, மெதுவாக மறுபடியும் வட்டமாகத் தேய்க்க வேண்டும்.
பின்னர், அடுப்பை சிறுதீயில் வைத்து, தவாவில் போட்டு, எண்ணெய்விட்டுச் சுட்டு எடுக்கவும். சுட்டெடுத்த பரோட்டாவைத் தட்டி பிறகு பரிமாறவும். அப்போது தான் பரோட்டா லேயர் லேயராகப் பிரிந்து வரும்.
தேவையானவை:
சேமியா - 450 கிராம்
நெய் - கால் கிண்ணம்
கடுகு, உளுந்தம் பருப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 4 முதல் 5 வரை
இஞ்சி - 1துண்டு
புளித்த தயிர் - 1கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரி பருப்பு - 12

செய்முறை: 450 கிராம் சேமியாவை கால் தேக்கரண்டி நெய்விட்டுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி நெய்யில், 1 தேக்கரண்டி கடுகு தாளித்து, பச்சை மிளகாய்களை வதக்கிக் கொள்ளவும்.
பின்னர், முந்திரிப் பருப்பை, பொடிப் பொடியாக நறுக்கி, வறுத்துக் கொள்ளவும். இவற்றை 1 கப் புளித்த தயிரில் 1 தேக்கரண்டி பொடி செய்த உப்பைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.
இட்லிப் பானையிலோ அல்லது வாணலியிலோ, இட்லித் தட்டில் வாழை இலையைப் போட்டு, அதில் கலந்து வைத்துள்ள சேமியா மாவில் இட்லித் தட்டுக்குத் தகுந்தபடி மாவை கரண்டியால் எடுத்து, ஊற்றும் பதத்திற்குக் கரைத்து, இட்லியாக ஊற்றி மூடவும். இதேபோல், அடுத்த ஈட்டிற்கும் கரைத்து ஊற்றவும். சேமியா, பம்பாய் ரவை இவை இரண்டையும் தனித்தனியாக வறுத்தெடுத்து, சேர்த்தும் இட்லி வார்க்கலாம்.
தேவையானவை:
வரகு அரிசி மாவு - 300 கிராம்
கடலை மாவு - 200 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிது
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை: எண்ணெய் தவிர்த்து, முதலில் வரகு மாவை சிறிது வறுத்து எடுக்கவும். பின், கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும், வறுத்த மாவுடன் கலந்து தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிசறிக் கொள்ளவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து, போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து, மாவை உருட்டிப் போடவும். பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தேங்காய்ச் சட்டினியுடன் பரிமாற சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.
தேவையானவை:
தக்காளி - 2
நூடுல்ஸ் - 100 கிராம்
குடமிளகாய் - பாதி ( மெலிதாக நீளமாக நறுக்கியது)
சோயா சாஸ் - 1தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை: தக்காளியை விழுதாக அரைக்கவும். வாணலியில் தேவையான தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, அதில் நூடுல்ûஸ போட்டு, வேக வைத்து எடுக்கவும்.
பிறகு, வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி அதில் குடமிளகாய், கேரட், மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பின், அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது மற்றும் சோயாசாஸ் ஆகியவற்றை இதனுடன் சேர்க்கவும், பின்னர், வேக வைத்துள்ள நூடுல்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான தக்காளி நூடுல்ஸ் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...