தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பொங்கல் டிப்ஸ்

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது சூடாக இருக்கும்போதே அரை கப் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவை கூடும்.

News image
Updated On :15 ஜனவரி 2020, 11:43 am


சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது சூடாக இருக்கும்போதே அரை கப் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவை கூடும்.

- சர்க்கரைப் பொங்கலில் கனிந்த பலாச்சுளைகளை பாலில் அரைத்துக் கலந்தால் சுவை அருமையாக இருக்கும்.

- கொப்பரைத் தேங்காயைத் துருவி திராட்சை முந்திரிப்பருப்பை அரைத்தும், சிறிதளவு உடைத்தும் சர்க்கரைப் பொங்கலில் கலந்தால் சுவையும் மணமும் கூடும்.

- சர்க்கரைப் பொங்கலுக்கு வெல்லம் சேர்க்கும் போது வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டியப் பிறகு சேர்த்தால் மண் நறநறக் காது.

- சர்க்கரைப் பொங்கலில் கரும்புச் சாறு , பசும்பால் சேர்த்து பொங்கினாலும் சுவையாக இருக்கும்.

- பொங்கல் பதமாகி வரும்போது நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, நெய்யில் வறுத்த சிறுசிறு தேங்காய் கீற்று போட்டால் நன்றாக இருக்கும்.

- சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் இவற்றை துண்டு
களாக்கி நெய்யில் வறுத்த பாதாம் பருப்பும் சேர்த்தாலும் சத்து கூடும்.

- பொங்கலைக் கிளறும்போது சிறிது சிறிதாக நெய்விட வேண்டும். அரிசியுடன் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் மணம் கூடும்.

- குக்கரில் பொங்கல் செய்பவர்கள் குக்கருக்கு சந்தனம், குங்குமம் வைத்து மஞ்சளோடு ஒரு இலையை அதன் பிடியில் கட்டி பொங்கல் செய்ய வேண்டும்.

- பொங்கலன்று எல்லா காய்களையும் சேர்த்து குழம்பு செய்யும்போது கிழங்கு வகைகளை முதலில் மண்போகக் கழுவி குக்கரில் வேக வைத்து குழம்பில் கடைசியாகச் சேர்த்தால் நன்றாக வெந்து வயதானவர்களும் சாப்பிட முடியும்.

- பொங்கலுக்கு கோலம் இடுபவர்கள் முதலில் தரையை பளிச்சென துடைத்துவிட்டு மாக்கோலம் போடலாம். பெயிண்ட் கோலமும் போடலாம். பளிச்சென இருக்கும்.

- பொங்கலன்று மஞ்சள் பூசணிக்காயை (பரங்கிக்காய் என்றும் சொல்லப்படும்) கட்டாயம் சமையலில் சேர்க்க வேண்டும். அதனால் அதை தனியாக கூட்டாக செய்து சாப்பிடலாம். குழம்பில் சேர்த்தால் கரைந்து போய்விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.