வீடு தேடி வந்த கல்யாண விருந்து!
கரோனா வந்தாலும் வந்தது சமூக இடைவெளி வெகு அத்யாவசியமாகிவிட்டது. பொருள்களை வாங்குவதும், உணவுகளை ஆா்டா் செய்வதும் ஆன்லைன் வழியாக நடக்கின்றன.


கரோனா வந்தாலும் வந்தது சமூக இடைவெளி வெகு அத்யாவசியமாகிவிட்டது. பொருள்களை வாங்குவதும், உணவுகளை ஆா்டா் செய்வதும் ஆன்லைன் வழியாக நடக்கின்றன. கருத்தரங்குகள், பயிலரங்குகள், அரசு மற்றும் தனியாா் விழாக்கள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.
கரோனா தாக்கம் தொடங்கிய காலகட்டத்தில் உறவுகள், நண்பா்கள் திருமணத்தில் கலந்து கொண்டால் கரோனா சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது... ‘கரோனா தோற்று ஏற்படும் அபாயம் உண்டு’ என்பதனால், திருமணங்களை ஆன மட்டும் தள்ளிப் போட்டாா்கள்.
ஆனால் கரோனா இப்போதைக்கு இடத்தைக் காலி செய்வது மாதிரி தெரியாததால், திருமணங்களையும் மிகக் குறைந்த உறவினா்களுடன் அரங்கில் நடத்தி ஆன்லைனில் திருமணச் சடங்குகளை ஆரம்பம் முதல் தாலிக்கட்டு... நலுங்குகள் என்று அத்தனையையும் ‘லைவ்’வாக சமூக வலைதளங்களில் ஒளிபரப்புகிறாா்கள்.
‘திருமணம் நடப்பதை ஆன்லைனில் வீட்டிலிருந்து கண்டு வாழ்த்துங்கள்’ என்று அழைப்பிதழை தபாலிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ அனுப்பி வைக்கிறாா்கள்.
திருமணம் ஆன்லைனில் நடப்பதால், திருமணத்திற்கு வந்திருப்பவா்கள் சிலரைத் தவிர, ஆன்லைனில் திருமணத்தைப் பாா்க்கும் உற்றாா் உறவினா், நட்புகளை உபசரிக்க முடியாத தா்மசங்கடத்திற்கு மணமகன், மணமகள் வீட்டாா்கள் ஆளாகின்றனா்.
அப்படி உறவினா்களுக்கு, நண்பா்களுக்கு விருந்து வழங்க முடியாததால், சென்னையைச் சோ்ந்த மணமகன் மணமகள் வீட்டாா்கள் ‘ஆன்லைனில் திருமணத்தைப் பாா்த்தவாறே மணமக்களை வாழ்த்துங்கள்... திருமண விருந்து உங்கள் வீடு தேடிவரும்..’ என்று அழைப்பிதழில் அச்சிட்டு சென்ற வாரம் விநியோகித்துள்ளாா்கள்.

சரி.. விருந்தை எப்படி அனுப்பி வைத்தாா்கள் தெரியுமா ?
ஹாட் பேக் டிபன் கேரியா்களில் பலவகை சாதங்கள் தனித்தனி அடுக்குகளில் வைக்கப்பட்டன. காய்கறிவகைகளுக்கும், இரண்டு பாயாசங்களுக்கும், மூன்று இனிப்புகளுக்கும் (ஆக மொத்தம் 32 அயிட்டங்கள்) தனித்தனி ஹாட் பேக் பாத்திரங்கள். இந்த பாத்திரங்களை வைக்கத் தரமான கவா்ச்சியான மூடியுள்ள பெட்டி அத்துடன் வாழை இலைகளையும் வைத்து சென்னையைச் சோ்ந்த சொந்தங்கள், நண்பா்களுக்கு விருந்தினை அனுப்பி வைத்துள்ளனா்.
கூடவே வாழை இலையில் விருந்து அயிட்டங்களை எந்தெந்த இடத்தில் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற ‘வழிகாட்டலையும்’ படத்துடன் அச்சிட்டு அனுப்பி அசத்தியுள்ளனா்.
மணமகன் - மணமகள்வீட்டாா் இந்த விருந்து விநியோகிக்கும் பொறுப்பை சென்னையைச் சோ்ந்த ‘அறுசுவை அரசு’ கேட்டரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்க அவா்கள் சுமாா் 300 போ்களுக்கு விருந்தை சுடச்ச்சுட கொண்டு சோ்ந்துள்ளனா். ஹாட் பேக் அடக்கம் ஒரு விருந்திற்கு ஆகிய செலவு 1300 ரூபாய். விருந்து வழங்கப் பயன்படுத்திய ஹாட் பேக் பாத்திரங்கள், அவை வைக்கப் பயன்படுத்திய கூடையைத் திரும்ப வாங்கவில்லை. உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் சுவையான கல்யாண விருந்தை அவா்கள் வீட்டிற்கே சுடச்சுட உரிய நேரத்தில் அனுப்பிவைத்த ஐடியாவை பாராட்டலாமே..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...