விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை ஸ்பெஷல்!
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கழுவி நிழலில் காயவைக்க வேண்டும். சிறிது ஈரம் இருக்கும்போது மாவை மிஷினில் திரித்து சல்லடையால் சலிக்க வேண்டும்.


கொழுக்கட்டை மாவுதயாரிக்கும் முறை
தேவையானவை:
பச்சரிசி - கால்கிலோ
நெய் அல்லது எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானவை
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கழுவி நிழலில் காயவைக்க வேண்டும். சிறிது ஈரம் இருக்கும்போது மாவை மிஷினில் திரித்து சல்லடையால் சலிக்க வேண்டும். ஒரு கிண்ணம் மாவுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் என எடுத்துக் கொண்டு அதை பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்ததும் சிறிது உப்பு, நெய் சேர்த்து மாவை தூவி கட்டி தட்டாமல் கிளறி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையானவை:
கொழுக்கட்டை மாவு - கால்கிலோ
தேங்காய்த் துருவல் - 1கிண்ணம்
முந்திரி - 10
பாதாம் - 10
திராட்சை - 10
கடலைப்பருப்பு - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை: கடலைப் பருப்பை வேக வைத்து எடுத்து அதில் தேங்காய்த் துருவல், நெய்யில் வறுத்து பொடித்த பாதாம், முந்திரி, திராட்சை, சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து கிளரி கீழே இறக்க வேண்டும். கொழுக்கட்டை மாவை செப்பாகச் செய்து நடுவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை வைத்து மடித்து வேகவைத்து எடுக்க வேண்டும்.

தேவையானவை:
கொழுக்கட்டை மாவு - கால்கிலோ
பாசிப்பருப்பு - 100 கிராம்
துருவிய தேங்காய் - அரை கிண்ணம்
வறுத்த முந்திரி - 5
ஏலக்காய்ப்பொடி - 2 தேக்கரண்டி
வெல்லம் - 50 கிராம்
செய்முறை: பாசிப்பருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து குழையாமல் மலர வேக வைக்க வேண்டும். பொடித்த வெல்லத்தை சூடான தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி ஒரு வாணலியில் ஊற்றி பாசிப்பருப்பு தேங்காய்த் துருவல் சேர்த்து அடுப்பில் வைத்து லேசாக கிளறி ஏலப்பொடி, முந்திரி சேர்த்து சுருள கிளறி பூரணம் தயாரிக்க வேண்டும். கொழுக்கட்டை மாவை செப்பு மாதிரி செய்து அதில் சிறு சிறு உருண்டையாக பூரணத்தை வைத்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

தேவையானவை:
கொழுக்கட்டை மாவு - கால்கிலோ
இஞ்சி - 50 கிராம்
வெல்லம் - 50 கிராம்
பொட்டுக்கடலை - 25 கிராம்
நெய் - 1தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் தண்ணீர்விட்டு வெல்லத்தைக் கரைத்து வடியவிட்டு மீண்டும் அடுப்பில் வைத்தது துருவிய இஞ்சி, பொட்டுக்கடலை சேர்த்து அரைத்த விழுது சேர்த்து, நெய்விட்டு பூரணமாக கிளற வேண்டும். கொழுக்கட்டைமாவில் செப்பு செய்து இஞ்சி பூரணத்தை சிறிது, சிறிதாக வைத்து மூடி அழுத்தி பிடித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

தேவையானவை:
கொழுக்கட்டை மாவு - கால்கிலோ
தேங்காய் - 1மூடி
வெல்லம் - 100 கிராம்
ஏலப்பொடி - 1தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வெல்லத்தைப் போட்டு ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து ராகி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி இறுகியதும் கீழே இறக்கி, சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து அப்படியே ஆவியில் வேக வைக்கவும். கொழுக்கட்டை மாவில் நடுவில் பூரணமாக வைத்து வேக வைத்தும் செய்யலாம்.

தேவையானவை:
கொழுக்கட்டை மாவு - கால்கிலோ
வெள்ளை உளுந்து - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 5
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை: உளுந்தை ஊற வைத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். மாவை வழிக்கும் முன்பாக ஒன்றிரண்டாக பொடித்த மிளகாய் வற்றலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். பின்னர், அரைத்த மாவை உப்புச் சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். பின்னர், உதிர்த்த மாவில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். கொழுக்கட்டை மாவில் செப்பு செய்து நடுவில் உளுந்து கலவையை பூரணமாக வைத்து மூடி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சுவையான உளுந்து காரக் கொழுக்கட்டை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...