மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சவாலாக ஏற்று செயல்பட்டோம்!

கரோனாவின் கொடிய கரங்களில் உலகமே சிக்கித் தவித்து வருகிறது. கரோனா வைரஸ் பாதித்துள்ளதா என்று கண்டறிய நடத்தப்படும் ஆய்வகங்களும் உலக நாடுகளில் குறைவு.

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 2:03 pm


கரோனாவின் கொடிய கரங்களில் உலகமே சிக்கித் தவித்து வருகிறது. கரோனா வைரஸ் பாதித்துள்ளதா என்று கண்டறிய நடத்தப்படும் ஆய்வகங்களும் உலக நாடுகளில் குறைவு. ஆய்வு நடத்தத் தேவையான கருவிகளும் குறைவு. கட்டணம் அதிகம். இந்தியாவிலும் அதே நிலைதான். கரோனா ஆரம்ப ஆய்வுக் கட்டணம் ரூ. 4500.இந்த சூழ்நிலையில் கரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கியுள்ளதா இல்லையா என்று கண்டறிய ஆய்வுகள் நடத்தும் செலவு குறைந்த முறை ஒன்றை புணேவில் பெண்மணி தலைமையில் உள்ள குழு கண்டுபிடித்துள்ளது.

பிரசவ நாள் நெருங்கிவிட்ட நிலையில் கரோனா பாதிப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு முறைக்கு வடிவம் கொடுக்கும் பணியில் அந்தப் பெண்மணி ஈடுபட்டார். தனது பொறுப்பினை வெற்றிகரமாக நிறைவேற்றி "இந்தியாவால் முடியும்' என்று நிரூபித்த நாளுக்கு அடுத்த நாள் தனது குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார். அந்தப் பெண்மணி எந்த ஒரு இக்கட்டான சிக்கலான அழுத்தமான சூழலில் பணி புரிந்திருப்பார் என்று யூகிக்க முடியும்.

அவர், மினல் தகாவ் போஸ்லே. கரோனா சோதனைச் சிறு கருவியைக் கண்டுபிடித்த குழுவின் தலைவர். இவரது குழு கண்டு பிடித்த சிறு கருவியின் பெயர் "பேத்தோ டிடெக்ட்' (PathoDetect).

"கரோனா வைரஸ் பரவுதலில் உள்ள துரிதத்தையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பினைக் கணக்கிலெடுத்து ஆறு வாரத்தில் இந்த முதல் கட்ட சிறு கருவியைக் கண்டுபிடித்தோம். வைரஸ் துறையில் பணிபுரியும் பத்து விஞ்ஞானிகள் போராடி இந்தக் கருவியை கட்டமைத்துள்ளார்கள்.

நாட்டின் அவசர நிலைமை கருதி இந்த பொறுப்பைச் சவாலாக ஏற்று செயல்பட்டோம். மார்ச் 18-இல் வைரஸ் குறித்த மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எங்களது கண்டுபிடிப்பை ஆய்விற்கு அனுப்பினோம். அடுத்த நாள் மார்ச் 19 - இல் எனக்கு மகள் பிறந்தாள்'' என்கிறார் போஸ்லே.

சென்ற மார்ச் 27 அன்று விற்பனைக்கு மருத்துவ சந்தையில் அறிமுகமாகியிருக்கும் இந்த ஆய்வு முறை மூலம், ஒருவருக்கு கரோனா பாதித்துள்ளதா இல்லையா என்பதை குறைந்த செலவில் கண்டறிய முடியும். மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இந்தியாவில், கரோனா பாதிப்புள்ளவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற செலவு குறைந்த துரித ஆய்வுமுறை காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

புணே நகரின் மேற்குப் பகுதியில் "மை லேப் டிஸ்கவரி' நிறுவனம் செயல்பட்டுவருகிறது. ஒருவரை கரோனா வைரஸ் தாக்கியுள்ளதா? இல்லையா? என்று கண்டறியும் ஆய்வு முறைகளைக் கட்டமைக்க இந்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்தான் "மை லேப்'. புணே, மும்பை, தில்லி, கோவா, பெங்களூரு நகரங்களில் இயங்கும் மருத்துவ ஆய்வகங்களுக்கு தனது முதல் 150 கருவிகளை "மை லேப்' அனுப்பியுள்ளது.

""விடுமுறை நாட்களிலிலும் மை லேப் வேலை செய்வதால் விரைவில் ஒரு லட்சம் சிறு கருவிகள் தயாரிக்கப்பட்டு விநியோகத்திற்கு தயாராகும். தேவைப்பட்டால் இரண்டு லட்சம் வரை தயாரிப்போம். ஒரு சிறு கருவியின் விலை 1200 ரூபாய். நூறு பேருக்கு முதல் கட்ட கரோனா பாதிப்பு குறித்த பரிசோதனைகளை நடத்த முடியும். அதாவது ரூ. 4500-க்குப் பதிலாக வெறும் பன்னிரண்டு ரூபாய் செலவில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உண்டா? இல்லையா? என்று அறிந்து கொள்ள முடியும். மக்களின் அச்சத்தையும் குறைக்க முடியும். இரண்டரை மணி நேரத்தில் சோதனை முடிவை அறியலாம்'' என்கிறார் மை லேப் இயக்குநர் கெளதம் வாங்கெட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.