வடாம் பிழியும் முன்பு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய்யும் தண்ணீரையும் கலந்து சிறிய துணியால் தென்னங்கீற்று தட்டியிலோ, பிளாஸ்டிக் பேப்பரிலோ துடைத்துவிட்டு வடாம் பிழிந்தால் வெயிலில் காய்ந்த பின்பு ஓட்டாமல் வடாம் தனியாக வந்துவிடும்.
வடாம் மாவில் சிறிது சோம்பு கலந்து காய வைத்தால் பொரித்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.
வடாம் போடுமுன் அந்தமாவுக் கூழிலோ அல்லது ஜவ்வரிசிக் கூழிலோ கிளறும்போது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்தால் ருசி சூப்பராக இருக்கும்.
ஜவ்வரிசி வடாம் செய்யும்போது பச்சைமிளகாயுடன் பூண்டையும் அரைத்து கலந்தால் வடாம் மணமாக இருக்கும். வாயுவும் நீங்கும்.
சோறு, பெரிய வெங்காயம், காயத்தூள், சீரகம், மிளகாய்த் தூள் ஆகியவைகளை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஓட விடுங்கள். பின்பு அதனை வடாமாகப் பிழிந்து காய வைத்தால் சுவையாக இருக்கும்.
இலை வடாம் செய்யும்போது முதல்நாள் அரைத்த அரிசிமாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு ஒன்று மசித்துக் கலந்தால் பொரிக்கும்போது பெரியதாகப் பொரியும். ருசியும் கூடும்.
வடக மாவிற்கு புளித்தமோர் அல்லது எலுமிச்சம்பழச்சாறு விடுவதற்கு பதிலாக ஒரு மாங்காயை வேக வைத்துத் தோல் நீக்கி மசித்து கூழில் சேர்த்தால் சத்தான வடாம் ரெடி.
வெங்காய வடகம் போடும்போது வழக்கமாக சேர்க்கும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், சோம்பு, வெந்தயம், பூண்டு கறிவேப்பிலை இத்துடன் இரண்டு ஸ்பூன் மிளகைப் பொடி செய்து கலந்து வடகம் போட்டால் மணம் அபாரமாக இருக்கும்.
ஜவ்வரிசி வடாம் செய்யும்போது எலுமிச்சம்பழம் பிழிந்த பிறகு சிறிது கெட்டியான தயிர், கொஞ்சம் சீரகப்பொடி சேர்த்தால் மணமாகவும் வெள்ளை வெளேரென்றும் இருக்கும்.
ஜவ்வரிசி வடாம் செய்ய கூழ்கிண்டும்போது உப்பு, காரம் சேர்ப்பதற்கு முன் வெந்த மாவில் கொஞ்சம் எடுத்து வைத்து பெரிய வடாமாக ஊற்றிக் காய வையுங்கள். தேவைப்படும் போது இந்த வடாத்தை எண்ணெய்யில் பொரித்து சர்க்கரை ஏலம் கலந்த பாலில் ஊற வைத்து சாப்பிடலாம். சுவையான ஜவ்வரிசி பால் போளி தயார்.
வடாம் மாவை முதல்நாள் கிளறி மறுநாள் இட்டால் வடாம் வெகு விரைவில் காய்வதுடன் பேப்பரிலிருந்து தானாகவே வந்துவிடும்.
வடாம் போட பச்சை மிளகாயை அரைக்க சுலபமான வழி அரிசியை மில்லில் அரைக்கும் போதே ஒரு கிலோ அரிசிக்கு நூறு கிராம் பச்சை மிளகாயை சேர்த்து அரைக்க வேண்டும்.
வடாமுடன் சிறிது கறிவேப்பிலையையும் அரைத்து கலந்து விட்டால் வடாம் மணமாகவும் சத்தாகவும் இருக்கும்.
வடாம் பிழியும் கூழில் சிறிதளவு வடிகஞ்சியைச் சேர்த்துக் கொண்டால் வடாம் மாவாக வாயில் கரையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


