மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

தங்க மங்கையானார்..!

பாட்மிண்டன் விளையாட்டில்  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி. சிந்து உலகிலேயே 7-ஆவது அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக திகழ்கிறார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:59 pm

ப. சுஜித்குமார்

பாட்மிண்டன் விளையாட்டில்  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி. சிந்து உலகிலேயே 7-ஆவது அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக திகழ்கிறார். 

தற்போது இளைஞர்கள், இளம்பெண்களால் அதிகம் விரும்பி ஆடப்படும் விளையாட்டாக பாட்மிண்டன் மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பி.வி.சிந்து, சாய்னா நெவால், கே.ஸ்ரீகாந்த், பிரணாய் ராய், அஸ்வினி, ஜுவாலா கட்டா ஆகியோர் பெற்று வரும் தொடர் வெற்றிகள் ஆகும். பாட்மிண்டனில் சர்வதேச அளவில் முன்பு சையத் மோடி, பிரகாஷ் பதுகோன், கோபிசந்த் ஆகியோர் பிரபலமானவர்கள்.


இதில் கோபிசந்த் தற்போது தேசிய தலைமைப் பயிற்சியாளராக திகழ்கிறார். அவரிடம் பயிற்சி பெற்ற சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் கோலோச்சுகின்றனர்.

ஹைதராபாத்தில் 5.2.1995-இல் தேசிய வாலிபால் தம்பதியான பிவி.ரமணா, விஜயாவுக்கு மகளாகப் பிறந்தவர் சிந்து. தந்தை ரமணா கடந்த 1986- இல் சியோல் ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். அவரது சகோதரி பி.வி.திவ்யாவும், ஹேண்ட்பாலில் தேசிய வீராங்கனையாவார்.

கடந்த 2001-இல் ஹைதராபாத் வீரர் கோபிசந்த் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதே, பாட்மிண்டனை சிந்து தேர்வு செய்ய ஊக்கமாக அமைந்தது. 8 வயதில் தனது பாட்மிண்டன் பயணத்தை தொடங்கிய அவர், முதலில் ரயில்வே இன்ஸ்ட்டியூட் பின்னர், கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்றார். தனது வீட்டில் இருந்து நாள்தோறும் 56 கி.மீ தூரம் பயணித்து பயிற்சிக்கு சென்றார் சிந்து.

அவரது, தன்மை மற்றும் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்காத நிலை போன்றவை தான் இந்த உயரத்துக்கு காரணங்களாக உள்ளன. சர்வதேச அளவில் 2009-இல் கொழும்புவில் நடைபெற்ற சப்ஜூனியர் ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றார் சிந்து. 2010-இல் மெக்ஸிகோவில் நடைபெற்ற ஜூனியர் உலகப் போட்டியில் காலிறுதி வரை முன்னேறினார். 

அதிகம் சம்பாதிக்கும் 7-ஆவது வீராங்கனை: வில்லியம்ஸ் சகோதரிகள், கார்பந்தய வீராங்கனை டேனிகா பேட்ரிக், எம்எம்ஏ வீராங்கனை ரோண்டா ரொவ்சி, உள்ளிட்டோர் வரிசையில் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 7-ஆவது வீராங்கனை என்ற சிறப்பை சிந்து பெற்றுள்ளார். செரீனா வில்லியம்ஸ் ரூ.130 கோடி சம்பாதித்துள்ளார். சிந்து இந்த ஆண்டு மட்டும் ரூ.4.22 கோடியை ஈட்டியுள்ளார்.

போர்ப்ஸ் இதழ் கணிப்பு: அதே நேரத்தில் பி.வி.சிந்துவுக்கு பரிசுத் தொகை மற்றும் பல்வேறு விளம்பரங்கள், இதர வகைகளில் மொத்தம் ரூ.61.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது என போர்ப்ஸ் இதழ் கணித்துள்ளது. சிந்துவின் குடும்பப் பாங்கான தோற்றம், கனிவான செயல்பாடு போன்றவற்றால் அவருக்கு ஏராளமான விளம்பர வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. பாங்க் ஆஃப் பரோடா. வைஸாக் ஸ்டீல் என பல்வேறு நிறுவனங்கள் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளார் சிந்து.

தற்போது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் துணை ஆட்சியர் பதவியில் உள்ளார்.  2013-இல் ராஜீவ் கேல்ரத்ன விருது, அர்ஜுனா விருது, 2016-இல் பத்மஸ்ரீ விருதுகளை வென்றுள்ளார் அவர்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  ""அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியலில் எனது பெயர் இருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் நான் பாட்மிண்டனை ஆடும் பணியை மட்டுமே செய்கிறேன். இதர வியாபார ஒப்பந்தங்களை பெற்றோர் தான் கவனிக்கின்றனர்'' என்றார்.

17 வயதிலேயே சாதனை

உலக பாட்மிண்டன் சம்மேளன தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்று 17 வயதே ஆன சிந்து சாதனை படைத்தார். அதன் பின்பு பல்வேறு போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவித்தாலும், 2013-இல் மலேசிய ஓபன் பட்டத்தை வென்றார். 2013, 2014 -இல்  உலக பாட்மிண்டன் போட்டியில் தொடர்ந்து வெண்கலம் வென்றார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி

2016-இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் இறுதி போட்டியில் கரோலினா மரினிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். முதல் ஒலிம்பிக் வெள்ளி வென்ற வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். 2017-இல் உலகப் போட்டியிலும் சிந்து வெள்ளி பதக்கம் பெற்றார்.

வழக்கமான தொடர் தோல்வி

ரியோ ஒலிம்பிக் போட்டி இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் நிகழாண்டு 2018-இல் 6 பெரிய போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் தொடர்ந்து தோல்வியடைய நேரிட்டது. 2017-இல் துபையில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் டூர் பைனல்ஸ் போட்டியிலும் வெள்ளியே வென்றார். மேலும் காமன்வெல்த் போட்டி ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார். அதே போல் ஆசியப் போட்டி, 2018-இல் உலகப் போட்டிகளில் இறுதி ஆட்டங்களில் தோற்று வெள்ளியுடன் திருப்தி பட வேண்டிதாயிற்று. இதனால் சிந்துவின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இறுதிச் சுற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி

அண்மையில் சீனாவின் குவாங்ஷு நகரில் நடைபெற்ற உலகின் தலைசிறந்த 8 வீராங்கனைகள் பங்கேற்ற உலக பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியில் சிந்து முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இறுதிச் சுற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

ஜப்பானின் நவோமி ஒகுராவை 21-19, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.