ஓட்ஸ் பகலாபாத்

தேவையானவை:
ஓட்ஸ் - 100 கிராம்
தயிர் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும், பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் தயிர், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு, ஓட்ûஸக் கலந்து நன்கு கிளறி மூடி வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.
ஜவ்வரிசி பக்கோடா

தேவையானவை:
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
ரவை - 1 கிண்ணம்
பச்சரிசி மாவு - 1 கிண்ணம்
தயிர் - 2 கிண்ணம்
வெங்காயம் - 1/2 கிண்ணம்
முந்திரிபருப்பு - 100 கிராம்
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, ஊறிய ஜவ்வரிசியுடன் ரவை, பச்சரிசி மாவு சேர்த்து நன்றாக பிசையவும். அத்துடன் நறுக்கிய மிளகாய், வெங்காயம், முந்திரி சேர்த்து எண்ணெய்யில் பக்கோடா போல் உதிர்த்துப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ஜவ்வரிசி பக்கோடா ரெடி.
சிறுதானிய போண்டா ( தினை - சோளம்)

தேவையானவை:
தினை மாவு - 1/2 கிண்ணம்
சோள மாவு - 1/2 கிண்ணம்
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
தினை மாவு மற்றும் சோளமாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், ஆப்ப சோடா சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர்விட்டு கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை, மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
சாக்லெட் பிஸ்கட் மில்க் ஷேக்

தேவையானவை:
பால் - 2 கிண்ணம்
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் - 1-2
க்ரீம் இல்லாத சாக்லெட் பிஸ்கட் - 1
சாக்லெட் சாஸ் - 2 ஸ்பூன்
செய்முறை: முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன், க்ரீம் இல்லாத சாக்லெட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் க்ரீம் உள்ள சாக்லெட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும். பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லெட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால் சாக்லெட் மில்க் ஷேக் ரெடி.
ராகி பணியாரம்

தேவையானவை:
ராகி மாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
துருவியத் தேங்காய் - 1/4 கிண்ணம்
பால் - 1 கிண்ணம்
ஆப்பசோடா, உப்பு - 1/4 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - சிறிது
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, சர்க்கரை, ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேங்காய்த் துருவல் மற்றும் பால் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பணியார கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும்.
ஆனியன் ரிங்ஸ்

தேவையானவை:
பெரிய வெங்காயம் - 1
மைதா - 1/2 கிண்ணம்
சோள மாவு - 1 /2 கிண்ணம்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பிரட் தூள் - 1 கிண்ணம்
சாட் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை: முதலில் வெங்காயத்தை பட்டையான வளையங்களாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சிப் பூண்டு விழுது, மிளகுத்தூள், பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். பின்பு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காய ரிங்கை மாவில் தோய்த்து எடுத்து பிரட் தூளில் புரட்டி பொரித்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

