சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சத்தான கீரை உணவுகள்

ஆரோக்கியம் தரும் சத்தான கீரை உணவுகள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:50 am

தவநிதி

ஆரோக்கியம் தரும் சத்தான கீரை உணவுகள்.

முள்ளங்கி கீரை பொரியல்

Story image

தேவையானவை:

முள்ளங்கி கீரை - ஒரு கட்டு (5 அல்லது 6 முள்ளங்கியின் கீரை)

வேர்க்கடலை - ஒரு கை பிடி.

மிளகாய் வற்றல் - 2 அல்லது 3

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க

செய்முறை: முள்ளங்கி கீரையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளித்து, கீரை சேர்த்து வதக்கி மூடி வேக விடவும். நீர் சேர்க்கத் தேவையில்லை.

வேர்க்கடலையை வறுத்து அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். கீரை வெந்ததும் உப்பு, பொடித்த வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் வதக்கி எடுக்கவும். சுவையான சத்தான முள்ளங்கி கீரை பொரியல் தயார். மிளகாய் வற்றலை பொடிக்காமல் தாளிக்கவும் செய்யலாம். வெங்காயம் பொடியாக      நறுக்கிச் சேர்த்து வதக்கி விட்டு பின் கீரை சேர்த்தும் வதக்கலாம்.

***

வல்லாரை மசியல்

Story image

தேவையானவை:

வல்லாரைக் கீரை - ஒரு கப்

கறிவேப்பிலை - 3 கொத்து

உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

துவரம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

தனியா - ஒரு மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

மிளகு - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

புளி - நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

தேங்காய் - ஒரு துண்டு (விரும்பினால்)

செய்முறை:  வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து கீரையை மட்டும் எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் தனியாச் சேர்த்து வறுக்கவும். சிவக்க துவங்கியதும் மிளகாய் வற்றல் மற்றும் மிளகுச் சேர்த்து வறுக்கவும்.

அதனுடன் கீரை மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். (அதிகமாக வதக்கத் தேவையில்லை. லேசாக வதங்கினால் போதும்). பிறகு புளியைச் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

ஆறியதும் தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்தெடுக்கவும். பிறகு விரும்பினால் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.

சுவையான வல்லாரை மசியல் தயார்.

***

மணத்தக்காளி ரசம்

Story image

தேவையானவை:

 மணத்தக்காளி கீரை - அரை கட்டு

அரிசி கழுவிய நீர் - ஒரு கிண்ணம்

தேங்காய் துருவல் - அரை

கிண்ணம்

சின்ன வெங்காயம் - 10

சீரகம் - முக்கால்

தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

சர்க்கரை - ஒரு

சிட்டிகை

மிளகு - சிறிது

செய்முறை: மணத்தக்காளி கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நன்றாக அலசி எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.

கீரையோடு அரிசி கழுவிய நீரை ஊற்றி சர்க்கரை, நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு மற்றும் சீரகத்தைச் சேர்த்து வேக விடவும். முழுவதும் வெந்ததும் தேங்காய்ப் பால் சேர்த்து லேசாக சூடானதும் எடுத்து விடவும். தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட கூடாது. பொடித்த மிளகு தூவி சாதத்துடன் ரசம் போலவோ

அல்லது சூப் போலவோ பரிமாறலாம்.

வயிற்று புண், வாய்ப் புண்ணை சரி செய்ய சிறந்த உணவு.

***

முருங்கைக்கீரை ஆம்லெட்

Story image

தேவையானவை:

முருங்கைக்கீரை - ஒரு கிண்ணம்

முட்டை - 3

வெங்காயம் - ஒன்று

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - ஒரு சில்

பச்சை மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - ஓர் இணுக்கு

மல்லித் தழை - சிறிது (கறிவேப்பிலை அளவு)

சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  அரைக்க வேண்டியவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் முருங்கைக்கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.  ஓர் அகன்ற கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும். தவாவைச் சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

முருங்கைக்கீரை ஆம்லெட் தயார்.

****

முளைக்கீரை மிளகுக் கூட்டு:

தேவையானவை:

முளைக்கீரை - ஒரு கட்டு

பயத்தம் பருப்பு - 2 கைப்பிடி

மிளகாய் வற்றல் - 5

சீரகம் - 2 தேக்கரண்டி

அரிசி மாவு - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

நெய், எண்ணெய் - 1 குழிக்கரண்டி

செய்முறை: குக்கரில் பயத்தம் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், சீரகம் தாளித்து அரிசி மாவு சேர்த்து வதக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி ஆற வைத்து தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து நறுக்கி அலசி வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றுடன் நறுக்கி அலசி வைத்திருக்கும் கீரையை சேர்த்து பிரட்டி வேக விடவும்.

கீரை வெந்ததும் வேக வைத்த பருப்பை ஊற்றி உப்பு சேர்த்து கிளறி விடவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து வெந்ததும் சிறிது நெய் விட்டு இறக்கவும்.

சுவையான கீரை மிளகுக் கூட்டு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.