எனக்கென ஒரு தனித்துவம்!
அருவியில் குளிக்கிற மாதிரி, இளையராஜாவின் இசையைக் கேட்கிற மாதிரி, மழையை ரசிக்கிற மாதிரி சிருஷ்டி டாங்கேவிடம் பேசுவதும் ஒரு தனி அனுபவம்....


அருவியில் குளிக்கிற மாதிரி, இளையராஜாவின் இசையைக் கேட்கிற மாதிரி, மழையை ரசிக்கிற மாதிரி சிருஷ்டி டாங்கேவிடம் பேசுவதும் ஒரு தனி அனுபவம்.... விரல்கள் கோர்த்து, அடிக்கடி கன்னத்தை வருடிக் கொண்டு, இதழ்களுக்கு முன் கண்கள் சிரிப்பது சிருஷ்டியின் தனி மேனரிசம்.
மும்பைப் பெண்ணாக இருந்து கொண்டு தமிழ் சினிமாவுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது போல் தெரிகிறது...?
பிறந்தது மட்டும்தான் மும்பை. மற்றபடி இங்கே தென்னிந்தியாவில்தான் எல்லாம். சின்ன வயதில் இருந்தே சினிமா பிடிக்கும். ஆனால், நான் ஒரு நடிகை ஆவேன் என்று நினைத்தது இல்லை. பத்து வருஷத்துக்கு முன்னால் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக மாடலிங் பெண்ணாகச் சென்னைக்கு வந்தேன். அப்போதுதான் மிஷ்கின் "யுத்தம் செய்' படத்தில் சின்ன வாய்ப்புத் தந்தார். அதுதான் முதல் சினிமா வெளிச்சம். அப்போது எனக்கு வயசு 18. அதன் பின் பள்ளி, கல்லூரி நாடகங்களில் நடிக்க ஆசை வந்து விட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி
சினிமாக்கள், குறும்படங்கள் என நடித்துக் கொண்டு இருந்தேன். இப்போது தமிழில் எனக்கென ஓர் இடம். நான்கு படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களுக்குச் சென்னையில்தான் இருப்பேன்.
சந்தோஷம்தான்.
இன்னும் பெயர் சொல்கிற அளவுக்கு ஒரு படம் இல்லையே...?
மற்ற ஹீரோயின்களிடம் கேட்கிற மாதிரி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்பதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை. நல்ல கதை. அருமையான திரைக்கதை. நல்ல டீம் என்றால் நடிப்பேன். மற்றபடி அஜித், விஜய், சூர்யா, விஜய், சிம்பு இவர்கள் கூடவெல்லாம் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை இல்லை. இது ஏதோ பந்தாவுக்காக சொல்லும் வார்த்தைகள் இல்லை. இப்போது பேசுகிற வார்த்தைகள் போல்தான் என் நிஜ வாழ்க்கையும் இருக்கும். எனக்குப் பிடிக்கிற மாதிரியான படங்களில்தான் நான் நடிப்பேன். அதனால்தான் "மேகா' மாதிரியான சில படங்களில் என்னைப் பார்க்க முடிகிறது. இதோ இப்போது வர இருக்கிற "நவரசத்
திலகம்' படமும் அது மாதிரிதான் இருக்கும். ரொமான்டிக் காமெடி படம். நான் நடிக்கும் படங்களில் எனக்கென ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். அதை எந்த நிலை வந்தாலும் மீற மாட்டேன்.
ஹீரோயினாக இருக்க ஆசை இல்லை என்பது போலும் உங்கள் பேச்சின் சாரம்சம் இருக்கு...?
ஆசை இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால், இங்கே ஹீரோயினாக இருப்பது ரொம்பக் கஷ்டம். எப்போதும் எல்லாரிடமும் கனிவாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தாலும் லைட் பாய் வரைக்கும் மனதில் எது இருந்தாலும் சிரித்து வைக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்த அதே மனதோடு இருக்க வேண்டும். நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். ஆனால், ரிசல்ட் பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள கூடாது. தினமும் நிறைய ஏமாற்றங்கள் கிடைக்கலாம். நடிக்க ஆரம்பித்த போது "உன்னால் இங்கே நிலைத்து நிற்க முடியாது' என சொன்னார்கள். அப்போது அது எனக்குப் புரியவில்லை. இங்கே கிடைக்கிற ஒவ்வோர் அனுபவமும் அவர்கள் சொன்னதுதான் உண்மை எனப் புரிய வைக்கிறது. அந்த அனுபவம்தான் சின்சியர் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதைக் கண்டுக் கொள்ளக் கூடாது என பாடம் கொடுத்துள்ளது.
இப்படிப் பேசுவது உங்களுக்கு ப்ளஸ்ஸா, மைனஸா...?
யார் கூடவும் சுலபமாகப் பழகி விடுவேன். அவர்கள் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் நட்பு வட்டத்துக்குள் அவர்களைக் கொண்டு வந்து விடுவேன். என் கூட நடித்த, வேலை பார்த்த எல்லாருமே எனக்கு நண்பர்கள்தான். எதிராளிக்குக் கூட என் பேச்சு பிடித்து விடும். அதனால்தான் நிறையப் பேர் என் நட்பு பட்டியலில் இருக்கிறார்கள். கல்லூரி நாள்களில் நண்பர்களோடு பழகிக் கொண்டு அப்படியே நாடகங்களில் நடித்து விட்டு கைத்தட்டல் வாங்குவது மாதிரி இருக்கிறது இவர்களுடன் வேலை பார்ப்பது. எனக்கே தெரியாமல்
என்னிடம் இருக்கிற பெஸ்ட்டை வெளிக் கொண்டு வருவது நண்பர்கள்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...