ஆரோக்கியச் சமையல்
தேங்காயைத் துருவி முதல் பாலைக் கெட்டியாக எடுத்து வைக்கவும். இரண்டாவது பாலுடன் மையாக அரைத்த மிளகாய்


தேங்காய்ப் பால் குழம்பு
தேவையானவை:
தேங்காய் - 1
கத்தரிக்காய் - 5
பீர்க்கங்காய் - 1
உருளைக்கிழங்கு - 300 கிராம்
மலைப் பூண்டு - 50 கிராம்.
மிளகாய் வற்றல் - 6.
தனியா - 1 கையளவு,
சீரகம் - 2 மேசைக்கரண்டி.
மஞ்சள் தூள் - 5 சிட்டிகை.
சோம்பு - 1 மேசைக்கரண்டி.
பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
கறிவேப்பிலை, எலுமிச்சைச்சாறு - தேவைக்கேற்ப.
செய்முறை: தேங்காயைத் துருவி முதல் பாலைக் கெட்டியாக எடுத்து வைக்கவும். இரண்டாவது பாலுடன் மையாக அரைத்த மிளகாய், மல்லி, சீரகத்தை கலக்கவும். அதை அடுப்பில் வைத்து பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக விடவும்.
வாணலியில் 50 மில்லி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தட்டிய பூண்டைப் போட்டு வதக்கி அதனுடன் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து குழம்பில் கொட்டி, முதல் பாலை விட்டு நன்றாகக் கொதித்ததும், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு கலந்து இறக்கினால் சுவையான "தேங்காய்ப் பால் குழம்பு' ரெடி.
வெந்தயக் கீரை சாதம்!

தேவையானவை:
வெந்தயக் கீரை - 2 கட்டு.
தக்காளி - 150 கிராம்.
பெரிய வெங்காயம் - 150 கிராம்.
பச்சை மிளகாய் - 3.
இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி.
பூண்டு - 10 பல்.
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி.
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி.
பச்சரிசி - 1/2 கிலோ.
நெய், மஞ்சள் தூள், மல்லித்தழை - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து, அலசி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டித் தனித்தனியாக வைக்கவும். பூண்டை நசுக்கி கொள்ளவும்.
பெரிய கடாயில் தேவையான நெய்விட்டு, காய்ந்ததும், நசுக்கியப் பூண்டைப் போட்டு வதக்கிக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு, பிறகு மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சேர்த்து வதக்கிக் கொண்டு கீரையைக் கொட்டி நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி விழுதைச் சேர்த்து, தேவையான உப்பு கலந்து சுருள வதக்கி, சாதத்தைக் கலந்து நன்றாகக் கிளறி இறக்கினால், வெந்தயக் கீரை சாதம் ரெடி.
பலாக் கொட்டை அவியல்!

தேவையானவை:
பலாக் கொட்டை - 1/2 கி.
முருங்கைக் கீரை - 2 பிடி.
தேங்காய் - 1 மூடி.
மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி.
மஞ்சள் தூள் - 5 சிட்டிகை.
வெங்காயம் - 100 கிராம்.
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பலாக் கொட்டைகளை ஊற வைத்து, தோல் நீக்கி, பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முருங்கைக்கீரை கலந்து வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பலாக்கொட்டைகளைக் கொட்டி அரை உப்பு கலந்து வேகவிடவும். வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு கிளறி, தேவையான உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கி விடவும். பலாக் கொட்டை அவியல் ரெடி.
- அ. யாழினி பர்வதம், சென்னை.
பட்டாணி சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு - 200 கிராம்.
பட்டாணி - 100 கிராம்.
மல்லித்தழை - தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் -3.
இஞ்சி - 1 துண்டு.
உப்பு, நெய் - தேவையானது.
செய்முறை: கோதுமைமாவுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைய வேண்டும். பட்டாணியை வேக வைத்து மல்லித் தழை, மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்க வேண்டும். உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்க வேண்டும்.
கோதுமை மாவைச் சிறு கிண்ணம் போல செய்து அதனுள் பட்டாணி விழுதை வைத்து மூடி விழுது வெளியே வராதபடி மெதுவாக சப்பாத்திகளாக இட்டு நெய்விட்டு சுட்டெடுக்க வேண்டும்.
முருங்கைக்காய் டிக்கா
தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 2
முருங்கைக்காய் - 3
உருளைக்கிழங்கு - 3
இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
மல்லித்தழை - 2 கொத்து
உப்பு, எண்ணெய் - தேவையானது.
செய்முறை: முருங்கைக்காயை மூன்று துண்டாக நறுக்கி வேக வைத்து சதையை வழித்தெடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி மசிக்க வேண்டும். பிரெட் ஸ்லைûஸ உதிர்த்து வைக்க வேண்டும். மல்லித் தழையைப் பொடியாக நறுக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இஞ்சி, மிளகாய் விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு கட்லெட்டுகளாகத் தட்டிச் சூடான தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...