கவலை எப்படி வரும்? என்று வரும்? எதற்கெல்லாம் வரும்? என்று யோசித்துக் கொண்டே இருக்க முடியாது. அப்படி யோசித்துக் கொண்டிருந்தால் அதுவே மிகப் பெரிய கவலையாக மாறிவிடும்.
தற்போதெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்தே கவலையான மனநிலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. கவலையே இல்லாமல் ஒருவர் இளமைப் பருவத்தை கடந்த வரலாறு, இப்போது நிச்சயம் இல்லை.
உங்கள் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக சிலர் எதிர்மறையாகச் செய்யும் வேலைகள் உங்களுக்குக் கவலையைத் தரலாம். நீங்கள் முன்னேறிச் செல்வதைப் பொறுக்காத உறவுகளாலும் உங்களுக்கு கவலை வரலாம்.
நீங்கள் தவறே செய்யாவிட்டாலும் உங்களை பிரச்னையில் சிக்க வைப்பதற்காக சிலர் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு கவலையைத் தரலாம். உடன் இருந்தே துரோகம் செய்பவர்களால் உங்களுக்குக் கவலை ஏற்படலாம். இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் அந்த அழுத்தத்தின் அளவு கூடிக்கொண்டே இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. இதனால் உங்களின் முன்னேற்றம் கூட தடைபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே அத்தகைய கவலைகளில் இருந்து விடுபட்டால் தான் நீங்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உங்கள் பணிகளில் கவனம் செலுத்த முடியும்.
கடந்த காலங்களில் நடந்த கவலை தரும் சம்பவங்களை மறக்க முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் கடந்த காலத் தோல்விகளையும் கொஞ்சம், கொஞ்சமாக மறந்தால்தான் புதிய நிகழ்வுகள் நம்மை உற்சாகப்படுத்தி உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அதைவிட்டுவிட்டு கடந்த கால கவலை தரும் நிகழ்வுகளை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தால் மீண்டும் அந்த கவலையில் நாம் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டு. நேற்றைய கவலைகளை நினைத்திருந்தால் இன்றைய மகிழ்ச்சியைத் தொலைத்து விடுவோம் என்பதுதான் உண்மை.
தவறு செய்கின்றபோது அதைத் திருத்திக் கொண்டு புதிய வழிகளைத் தேர்வு செய்து பயணம் செய்வது நல்லது. அப்படி இல்லாமல் அந்தத் தவறை நினைத்துக் கொண்டே இருப்பது ஒரு நுண்ணோக்கியின் கீழ் சிறிய பொருளை வைத்துப் பார்ப்பது போல. நுண்ணோக்கி எப்படி பொருளைப் பெரிதாக்கிக் காட்டுகிறதோ... அதுபோல ஒரு கவலையை நினைத்துக் கொண்டிருந்தால், அது பூதாகரமாகத்தான் தோன்றும். அது நம் வளர்ச்சிக்குத் தடையாக மாறிவிடும்.
மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிக்க பழகுங்கள். அது நம்மை இலகுவாக மாற்றி அடுத்த பணியில் கவனம் செலுத்தத் தூண்டும்.
நீங்கள் தவறு செய்ததாக தெரிய வந்தால் அதை ஏற்றுக் கொள்ளப்பழகுங்கள். அதை விட்டுவிட்டு தவறே இல்லை என சொல்வதற்காக சிரமப் படாதீர்கள். அது உங்கள் கவலையை மேலும் மேலும் அதிகரிக்கும். தவறு செய்வதை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டீர்கள் என்றால் உங்களின் சுயஅங்கீகாரத்திற்கு மதிப்பு கிட்டும்.
ஒவ்வொருவரும் தாங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டால் போதும் அங்கு வருத்தத்திற்கு இடமே இல்லை. எங்கோ ஓர் இடத்தில், யாரோ ஒருவர் நமக்காக இருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கான பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களுடைய செயலால், பேச்சால் ,நடவடிக்கைகளால் எதிர்மறையாக நடக்கக் கூடிய விஷயங்களைக் கூட நேர்மறையான எண்ணங்களால் மாற்றி அமைக்க முடியும். அதை மனதில் கொண்டு உங்களுக்கான எண்ணங்களை வடிவமைத்துச் செயல்படுங்கள். அப்படி செயல்பட்டால் கவலை என்பது வருத்தப்பட்டு உங்களை விட்டு அகன்று விடும்.
இன்னும் சொல்லப் போனால் கவலை எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நேர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு அகன்று விடுகின்றன. கவலை தொடரும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வலியும், கோபமும், வேதனையும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் . இது நம்முடைய செயலாற்றல் , தூக்கம் , அமைதி , சிரிப்பு , மகிழ்ச்சி என அனைத்தையும் பறித்துக் கொள்ளும். இதனால் நம்முடைய இலக்கினை நம்மால் அடைய முடியாமல் போய் விடக்கூடும்.
அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களை நினைவு கூர்ந்து, அதன்படி செயல்பட்டால் மீண்டும் ஒருமுறை தவறு ஏற்படாமல் இருக்க முடியும். அதனால் வருத்தமோ, சிக்கலோ ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும். கவலை நமக்குள் ஏற்பட்டு விட்டால் அதை அப்படியே விட்டு விட்டால் நம்மை விட்டு போகாது. அந்த கவலை நம்மை விட்டு அகலுவதற்கான முயற்சிகளை நாம் தான் எடுக்க வேண்டும்.
கவலையை பென்சிலால் எழுதுவது போல எடுத்துக் கொள்ள வேண்டும். தேவை இல்லை எனில் அதை எளிதாக அழித்து விட முடியும். சிலர் கவலையை பேனாவினால் எழுதியது போலவோ, அல்லது மிக உயர்ரக மையினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் அதை அழிப்பதற்கு சிரமம். அல்லது அழிக்க முடியாது என்று நினைத்து விடுகிறார்கள். இதனால்தான் கவலை பூதாகரமாக மாறி விடுகிறது ஒவ்வொரு கவலையையும் எளிதில் அழிக்க முடியும் என நினைத்துக் கொள்ளுங்கள். நம்மால் நிச்சயம் அதை அழிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் கவலையே , கவலைப்பட்டு விலகிச் சென்றுவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


