சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. விலை அதிகம் கொடுத்து வாங்கப்படும் இந்த கார்களை சுமார் 300 கி.மீ. தூரம் ஓட்டிச் சென்று, மீண்டும் நான்கு மணி நேரம் நிறுத்தி சார்ஜ் செய்து விட்டு இயக்கும் அளவுக்குப் பொறுமை இன்றைய சூழலில் யாரிடமும் இல்லை.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 500- 700 கி.மீ. தூரம் வரை செல்லும் மின்சார கார்கள் வரும் நாள்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கார் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி அளித்தாலும், கார்களை மீண்டும் சார்ஜ் செய்ய மணிக்கணக்கில் நிறுத்த வேண்டி இருக்கும். அதுமட்டுமன்றி, உலகில் அனைத்து வாகனங்களும் மின் வாகனங்களாகிவிட்டால், ரீசார்ஜ் செய்வதற்கு பங்க்குகள் அதிகம் தேவைப்படும். மின்சாரத் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடும்.
பெட்ரோல் நிலையங்களில் சில நொடிகளில் எரிபொருளை நிரப்பி வாகனங்களை இயக்குவதைப்போல், சட்டென சார்ஜ் ஆகும் வகையிலோ அல்லது செல்லும்போதே ரீசார்ஜ் ஆகக் கூடிய மின்சார பேட்டரி தொழில்நுட்பம்தான் இன்றைய முக்கிய தேவையாகும்.
இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குர்ரம் அஃப்ரிதி கண்டுபிடித்துள்ளார்.
செல்லிடப்பேசிக்கு "வயர் லஸ்' சார்ஜ் போடுவதைப்போல், சாலைகளில் கார்கள் செல்லும்போதே சாலைகளுக்கு கீழ் பதிக்கப்பட்டுள்ள மின்சக்தியின் மூலம் கார் பேட்டரி ரீசார்ஜ் ஆகும் தொழில்நுட்பம் இது. இதற்காக விண்வெளியில் இருந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும் நாசாவின் "ரேடியோ வைவ்ஸ்' தொழில்நுட்பத்தை அஃப்ரிதி பயன்படுத்தி உள்ளார். இதற்காக சாலை
களில் தனிப் பாதையை உருவாக்கி, சாலைக்கு அடியே மெட்டல் பிளேட்டுகள் வைக்கப்பட்டு, அதில் மின்சாரம் பாய்ச்சப்படும்.
இது கார்களுக்கு அடியில் இணைக்கப்பட்டுள்ள கருவிகள் மூலம் சாலையில் செல்லும்போதே பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும். இந்த தொழில்நுட்பம் மூலம் சாதாரண கார்களை நான்கு முதல் ஐந்து மணி நேர தொடர் இயக்கத்தின்போதே சார்ஜ் செய்துவிடலாம். இந்த தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த மிகுந்த பொருள் செலவாகும். எனினும் வருங்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இதை குறைந்த செலவில் அமல்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


