ரகசிய தாக்குதல்களை நடத்தவும், உளவு பார்க்கவும் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த டிரோன்கள், தற்போது சிறு வடிவில் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
வருங்காலத்தில் வீட்டிற்குப் பொருள்களை விநியோகம் செய்யும் அளவுக்கு டிரோன் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது.
பொது இடங்களில் டிரோன் பயன்பாட்டுக்கு உரிமம் பெற வேண்டும் என்ற அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. டிரோன்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
தற்போது டிரோன்களைப் பயன்படுத்தி மேகங்களில் மின்சாரத்தைப் பாய்ச்சி மழை பொழிய வைக்க ஐக்கிய அரபு அமீரகம் முயற்சி செய்து வருகிறது. மேகங்களில் ரசாயனப் பொருள்களை விமானங்கள் மூலம் தூவி மழை பொழிய வைக்கும் திட்டங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
ஆகையால், ஆண்டுக்கு வெறும் 100 மி.மீ. மட்டுமே மழை பெய்யும் ஐக்கிய அரபு அமீரகத்தில், மழைப் பொழிவை அதிகரிக்க சுமார் ரூ. 100 கோடியில் 9 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது டிரோன் தொழில்நுட்பம் மூலம் மழை பொழிய வைக்கும் ஆய்வுகள் சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைக்குமிழிகளை ஏந்தியிருக்கும் மேகங்கள் அதிக அளவில் இருந்தாலும் அவை சிதறிக் கிடக்கின்றன. இவற்றை ஒன்றிணைக்க டிரோன்கள் மூலம் மின்சாரம் பாய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரத்தைப் பாய்ச்சும் தொழில்நுட்ப பொருள்கள், வானிலை சென்சார்களுடன் தாழ் வானில் டிரோனைப் பறக்கவிட்டு மேகங்கள் மீது மின்சாரம் பாய்ச்சப்படும்.
நேர்மின் சுமை, எதிர் மின் சுமை கொண்ட மின்சாரம் மேகங்களுடன் ஒட்டிக் கொண்டு தாழ்வானில் உள்ள தூசு துகள்களுடன் சேர்ந்து மழைக்குமிழி மேகங்களை ஒன்று சேர்த்து பெரும் மேகங்களாக உருவாக்கி மழை பொழிய வைப்பதே இந்த தொழில்நுட்பத்தின் செயல்பாடு.
சிறிய அளவு டிரோன் மூலம் இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் பெரும் முதலீட்டில் பெரிய விமானம் மூலம் மேகங்களுக்கு மின்சாரம் பாய்ச்சும் திட்டத்தையும் செயல்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் மழைப் பொழிவு ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. இது வெற்றி பெற்றுவிட்டால், மழைப் பொழிவு டிரோன்களை அங்காங்கே நிறுத்தி மழை நீரைப் பெற்றுவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


