2021 - ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தாகிவிட்டது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பழைய ஸ்மார்ட் போன்களில் "வாட்ஸ்அப்' செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு 4.0.3 "வெர்ஷன்' இல்லாத ஸ்மார்ட்போன்களில் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்2, எச்டிசி டிசையர், எல்ஜி ஆப்படிமஸ் பிளாக், மோட்டரோலா டிராய்டு ரேசர் ஆகிய பிரபல மாடல் ஸ்மார்ட் போன்கள் வாட்ஸ்அப் சேவையை இழக்கும். இந்த பழைய போன்களுக்கான வாட்ஸ்அப் அப்டேட்டை அந்த நிறுவனம் வழங்காத காரணத்தால் இதுபோன்று சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டும் ஆன்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன், அதற்கும் கீழ் உள்ள வெர்ஷன் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்பட்டது. ஆனால், இந்த வகையிலான பழைய ஸ்மார்ட் போன்களில் உள்ள பிற சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இதேபோல், குறைந்தபட்சம் ஐஓஎஸ் 9 இல்லாத ஆப்பிள் ஐ போன்களில் உள்ள வாட்ஸ்அப் செயலியும் நிகழாண்டு ஜனவரி முதல் செயல்படாது. அதன்படி, ஐபோன் 4 அதற்கு முந்தைய மாடல்கள் அனைத்திலும் வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்படும்.
எனினும், ஐபோன் 4எஸ், 5, 5எஸ், 5சி, 6, 6எஸ் ஆகிய போன்களில் ஐஓஎஸ் 9 வெர்ஷனை அப்டேட் செய்து வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஐபோன் 6எஸ், 6 பிளஸ், எஸ்இ பர்ஸ்ட் ஆகிய போன்களில் புத்தம் புதிய ஐஓஎஸ் 14 வெர்ஷன் வரை அப்டேட் செய்யலாம். ஐஓஎஸ் 9 வெர்ஷன் இருக்கும் ஐபோன்களில் நிகழாண்டில் மட்டும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தலாம். அடுத்த ஆண்டு ஐஓஎஸ் 9 வெர்ஷனும் காலாவதியாகலாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள வெர்ஷனைத் தெரிந்து கொள்ள, "செட்டிங்ஸ் - அபோட் போன்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதேபோல், ஐபோன்களில் "செட்டிங்ஸ் - ஜெனரல்-இன்ஃபர்மேஷன்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
வயதானவர்கள் பலர் காலாவதியான பழைய வெர்ஷன் போன்களிலேயே வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். நிகழாண்டில் அவர்
களுக்கு வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்பட்டு அவதியுறுவதில் இருந்து அவர்கள் தப்பிக்க புதிய ஸ்மார்ட் போன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


