வேலை... வேலை... வேலை...
01.07.2020 தேதியின்படி 18 வயது முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்கள்: 79 பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: பெர்சனல் அசிஸ்டண்ட் (நீதியரசருக்கு)- 66
சம்பளம்: மாதம் ரூ. 56,100-ரூ.1,77,500 + சிறப்பு சம்பளம்
பணி: பெர்சனல் அசிஸ்டண்ட் (பதிவாளருக்கு) - 08
சம்பளம்: மாதம் ரூ. 36,400-ரூ.1,15,700
பணி: பெர்சனல் கிளார்க் (துணை பதிவாளருக்கு) - 03
சம்பளம்: மாதம் ரூ. 20,600-ரூ.65,500
வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 வயது முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆங்கிலம், தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_159_2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.02.2021
பணி: குரூப் எக்ஸ்
தகுதி: கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடங்களைக் கொண்ட பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: குரூப் Y (எக்ùஸப்ட் ஐஏஎஃப் (எஸ்)
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டு தொழிற்கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: குரூப் Y (மெடிகல் அசிஸ்டன்ட் டிரேட் மட்டும்)
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் அடங்கிய பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
பணி: ஏர்மேன் குரூப் எக்ஸ்/ குரூப் Y
தகுதி: கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடங்களைக் கொண்ட பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம் 152.5 செ.மீட்டர், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையும் குறைந்தபட்சம் 55 கிலோ உடல் எடை பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விமானப்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்கள் அறிய: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_18_2021b.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.02.2021
மொத்த காலியிடங்கள்: 14
பணியிடம்: கடலூர்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மேனேஜர் (கால்நடை) - 01
சம்பளம்: மாதம் ரூ.55,500 - ரூ.1,75,700
பணி: டெபுடி மேனேஜர் (கியூசி/ டிசி) ) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,600 - ரூ. 1,12,800
பணி: எக்ஸிகியூட்டிவ் (ஆபிஸ்) - 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.65,500
பணி: எக்ஸிகியூட்டிவ் லேப் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000 - ரூ.63,600
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ஆபிஸ்/ பர்சேஸ்) - 03
பணி: பிரைவேட் செகரட்டரி கிரேடு - III) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ. 65,500
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு OCபிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயதுவரம்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: லைட் வெஹிகிள் டிரைவர் - 02
பணி: டெக்னீசியன் (எலக்ட்ரிகல்) - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ. 62,000
பணி: சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் - 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ. 50,000
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், மற்ற பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வை அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை சேத்தியாத்தேப்பில் மாற்றத்தக்க வகையில் The General Manager, Cuddalore DCMPU Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அல்லது விரைவு அஞ்சலில் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:“The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Ltd., Sethiathope
மேலும் விவரங்கள் அறிய: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application%20forms%20with%20instructions.pdf/dc57a544-627e-b09b-943d-0027564c6ba5 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 11.02.2021
காலியிடங்கள்: 26
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டன்ட் டைரக்டர்- 02
பணி: அசிஸ்டன்ட் டைரக்டர் (புரொடக்ஷன்) - 01
பணி: அசிஸ்டன்ட் எடிட்டர் - 02
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,17,500
பணி: புரொடக்ஷன் அசிஸ்டன்ட் - 01
பணி: எடிட்டோரியல் அசிஸ்டன்ட் - 03
பணி: அக்கவுண்டன்ட் - 03
பணி: சீனியர் ஸ்டெனோகிராபர் - 02
பணி: அசிஸ்டன்ட் - 04
பணி: லைப்ரரியன் - 01
பணி: ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (ஹிந்தி) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400
பணி: லைப்ரரி அசிஸ்டன்ட் - 02
சம்பளம்: மாதம் ரூ.29,500 - ரூ.92,300
பணி: ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 01
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100
பணி: டிரைவர் - 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமம் பெற்றிருப்பவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள், சம்பந்தப்பட பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை National Book Trust ஆர்ர்ந் பழ்ன்ள்ற் பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதாவதொரு தேசிய வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://nbtindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area, Phase-ll, Vasant Kunj, New Delhi -110 070
மேலும் விவரங்களுக்கு:
https://www.nbtindia.gov.in/writereaddata/jobattachment/monday-january-25-20213-24-34-pmvacancy-notice-for-the-13-posts-on-direct-recruitment}basis.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 14.02.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...