பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரி!

டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 12:30 am

டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பராக் அகர்வால் கடந்த 2011-ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 2017-ஆம் ஆண்டு அவர், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அவருக்கு டுவிட்டர் தளத்தின் தொழில்நுட்ப உத்தி, இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, பயனாளிகள், வருவாய் மற்றும் அறிவியல் குழுக்களை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர் அதில் மிக திறம்படச் செயல்பட்டதால் இந்த தலைமை பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பராக் அகர்வால் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் 1984- இல் பிறந்தார். அவரது தந்தை அணு ஆற்றல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். தாய் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அகர்வால் 2001- இல் சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் தங்கப் பதக்கம் வென்றவர். 2000- இல் நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் 77 ஆவது தர வரிசை பெற்றுள்ளார். பின்னர் மும்பை சென்ற அவர், அங்குள்ள ஐஐடி-யில் பி.டெக் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். அத்துடன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

2011-ஆம் ஆண்டு அக்டோபரில் டுவிட்டரில் விளம்பரப் பொறியாளராகச் சேர்ந்தார். அவரின் திறமையான செயல்பாடுகளால் அந்நிறுவனத்தின் "சிறந்த மென்பொருள் பொறியாளர்' என்ற இடத்தைப் பெற்றார். அவரின் உழைப்பு மற்றும் திறமையின் காரணமாக 2018-இல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பராக் அகர்வாலை டுவிட்டர் நிறுவனம் நியமித்தது. டுவிட்டரில் பணியில் சேருவதற்கு முன்பு, அவர் மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகியவற்றில் ஆராய்ச்சிப் பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பராக் அகர்வாலின் மனைவி வினிதா அகர்வால், ஸ்டான்ஃபோர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அனஷ் என்ற மகன் உள்ளார். உலக அளவில் பெரும் நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர்பிச்சை, சத்யா நாதெல்லா உள்ளிட்டோர் தலைமை அதிகாரிகளாக பதவியேற்றுள்ள நிலையில், அந்த வரிசையில் பராக் இடம் பெற்றிருப்பது, குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.