ஸ்மார்ட் போனை உலக அளவில் அனைவரும் எளிதில் பயன்படுத்த உதவியது ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம்.
குறைந்த விலை ஸ்மார்ட் போன்களும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முன்வந்ததால் ஆன்ட்ராய்டு நிறுவனத்தை பிரபல கூகுள் நிறுவனம் வாங்கியது.
இதையடுத்து, ஸ்மார்ட் போன்கள் மட்டுமன்றி ஸ்மார்ட் டிவி, வாட்ச் என அனைத்து சாதனங்களிலும் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தைப் புகுத்தும் வகையில் மாற்றி கூகுள் சாதனை படைத்து வருகிறது.
ஆனால், ஸ்மார்ட் போன்களுக்காக உருவாக்கப்பட்ட முதல்கட்ட ஆன்ட்ராய்டு மென்பொருள்களுக்கான அப்டேட்களை தொடர்ந்து கூகுள் நிறுவனம் மேம்படுத்த முன்வராததால் அவை கைவிடப்படுகின்றன.
அந்த வகையில் 2011-இல் கொண்டு வரப்பட்ட ஆன்ட்ராய்டு 2.3. அதற்கு கீழ் உள்ள வெர்ஷன்களில் செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் கூகுள் வேலை செய்யாது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் ஜி-மெயில், கூகுள் சர்ச், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ், யூ டியூப் போன்ற சேவைகள் அந்த குறிப்பிட்ட பழைய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்
களில் பயன்படுத்த முடியாது. கடவுச்சொல் தவறு என்ற எச்சரிக்கை தகவல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
எனினும், புதிய வெர்ஷன் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் அந்த கூகுள் கணக்கு செயல்படும்
என்றும் குறைந்தது கூகுள் 3.0 வெர்ஷன் இருந்ததால் தான் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சேவை: இதேபோல், கணினியில் கூகுள் மீட் வெப் சேவையைப் பயன்படுத்த தனி செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் மீட் மற்றும் கூகுள் மீட் வெப்பைப் பயன்படுத்துவதில் எந்தவிதப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதால் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் மீட் வெப் செயலிக்குள் சென்று லிங்க்கைப் பயன்படுத்தாமலேயே கூட்டத் தகவல்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களில் உள்ளதைப்போல் குழுக்கூட்டத்தில் பங்கேற்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


