வீட்டை விட்டு வெளியே கடைக்குச் சென்றால்தான் உணவுப் பொருள்கள் கிடைக்கும் என்பது அந்தக் காலம். வீட்டிற்கு வெளியே கடையே வந்து காத்திருப்பது இந்தக் காலம்.
டீ முதல் மாத்திரை மருந்துகள் வரை இப்போது வீடு தேடி வந்து விடுகின்றன. கரோனா காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே தேவையான பொருள்களை வாங்கினார்கள்.
நகரங்களில் வாழும் மூத்த குடிமக்களுக்கு இந்தச் சேவை பெரும் உதவியாக உள்ளது. உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சேவையில் ரேபோக்களைப் பணியமர்த்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரில் தனியார் தொழில்நுட்ப நிறுவனம், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கும் ரோபோவைத் தயாரித்துள்ளது.
கேமலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கேமிரா, 3 டி சென்சார்களுடன் தானாகவே செயல்படுகிறது. 20 கிலோ வரை பொருள்களை எடுத்துச் செல்லும் திறன் இதற்கு உண்டு.
முட்டை உள்ளிட்ட எளிதில் உடைந்துவிடக் கூடிய பொருள்களையும் இந்த ரோபோ பத்திரமாகக் கொண்டு வந்து ஒப்படைக்கிறது.
சாலையில் சாதாரணமாகச் சென்று வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து பொருள்களை ஒப்படைக்கும் இந்த ரோபோக்கள், தற்போது சிங்கப்பூரில் சோதனை முயற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.
நாளொன்றுக்கு 5 முதல் 6 வீடுகளுக்குச்சென்று பொருள்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆப் மூலம் "கேமலோ' எங்கு வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி, ஒவ்வொரு வீட்டில் பொருள்களை வழங்கியவுடன் அல்ட்ரா வைலட் கதிர்கள் மூலம் தன்னைத் தானே ரோபோ சுத்தம் செய்து கொள்கிறது.
வாடிக்கையாளர்கள் என்ன பொருள்களை, எப்போது, எங்கு, எத்தனை மணிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை செயலி மூலம் தெரிவித்துவிட்டு பெற்றுக் கொள்ளலாம்.
சிங்கப்பூரில் அறிமுகமாகி உள்ள இந்த டெலிவரி ரோபோ விரைவில் பிற நாடுகளுக்கும் விரிவாகும் என்று எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


