உலகம் முழுவதும் உள்ள 200 கோடி பயன்பாட்டாளர்களுக்காக வாட்ஸ்அப் தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை அறிவித்து வருகிறது. மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப இந்த சேவைகள் பயனாளர்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக உள்ளன.
அவற்றில் சில தேவையற்றவையாகவும் உள்ளன.
தொழில்போட்டியின் காரணமாகவும், தகவல் பாதுகாப்புக்காகவும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது வாட்ஸ்அப் சாட்டில் பின்புறத்தில் இருக்கும் திரையின் வண்ணத்தை மாற்றவும், இருண்ட திரையாகப் பயன்படுத்தவும் உதவும் புதிய சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.
தற்போது வாட்ஸ்அப் சாட்டில் உள்ள எழுத்துகளைத் தனித்தனி வண்ணங்களில் காணும் வகையில் புதிய சேவை பரிசோதனையில் உள்ளது. இதன் மூலம் குழு சாட்டில் உள்ளவர்களின் உரையாடல்களைத் தனித்தனி வண்ணமிட்டு எளிதல் தேடி கண்டுபிடிக்கலாம்.
இதேபோல், வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் ஆடியோ பதிவுகளை வேகப்படுத்தி கேட்கும் வசதியும் புதிதாக இணைக்கப்பட உள்ளது.
சாட்களில் உள்ள தகவல்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் கடவுச்சொல் வசதியையும் வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது.
மேலும், வாட்ஸ்அப்பில் சேமிக்கப்படும் சாட்டுகளை ஐபோன்களில் இருந்து ஆன்ட்ராய்டு போன்களுக்கும், ஆன்ட்ராய்டு போன்களில் இருந்து ஐபோன்களுக்கும் எளிதாக மாற்றும் வகையில் புதிய சேவையையும் வாட்ஸ்அப் சோதித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


