சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவுகளில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

பரிதி இரா. வெங்கடேசன்

மத்திய அரசில் வேலை 

பணி: Assistant Engineer (Quality Assurance)

காலியிடங்கள்: 02

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவுகளில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Foreman (Computer Science)

காலியிடங்கள்: 02

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Senior Scientific Assistant (கம்ப்யூட்டர்), (எலக்ட்ரிகல்), (மெகானிக்கல்)

காலியிடங்கள்: 15

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Professor

காலியிடங்கள்: 23

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து எம்சிஐ-இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: உதவி பேராசிரியர் பணிக்கு 40வயதுக்குள்ளும், மற்ற அனைத்து பணிகளுக்கும் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: அதிகப்படியான தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில்  நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25 மட்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2020

கடற்படையில்   வேலை

பணி: பெர்மனென்ட் கமிஷன் ஆபிசர் (+2 பி.டெக் என்ட்ரி ஸ்கீம்) 

காலியிடங்கள்: 34
1. கல்விப் பிரிவு - 05
2.  எக்ஸ்கியூட்டிவ் & டெக்னிகல் பிரிவு 

தகுதி: கணிதம்,  இயற்பியல்,  வேதியியல் பாடப்பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன்  ஜி மெயின் தேர்வு-2020 - இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஜி மெயின் தேர்வு-2020 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி- ஆல் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்: போபால், பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா.
பயிற்சி நடைபெறும் இடம்: Indian Naval Academy,Ezhimala, Kerala
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1601362977_932086.pdf என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.10.2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பணி: புரபெஷனல் அசிஸ்டன்ட்  -III - 02
சம்பளம்: ரூ.647(தினசரி)
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: புரபெஷனல் அசிஸ்டன்ட்-II - 01
சம்பளம்: ரூ.713 (தினசரி)
தகுதி: பி.காம், பி.சி.ஏ முடித்து முதல் வகுப்பில் எம்.காம்., எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: பியூன் - 01
சம்பளம்: ரூ.391 (தினசரி)
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தகுதிக்கான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Dean, Madras Institute of Technology Campus, Anna unversity, Chrompet, Chennai - 600 044

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 21.10.2020


டிஎன்ஏ ஃபிங்கர்பிரிண்டிங் & டயாக்னாஸ்டிக்ஸ்  மையத்தில் வேலை

பணி: புராஜெக்ட் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 31,000
வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல், பயோ பிசிக்ஸ்,  பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோஇன்பர்மேஷன் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: புராஜெக்ட்ஸ் அசோசியேட் -ஐ

சம்பளம்: மாதம் ரூ.25,000 - 35,000
தகுதி: நேச்சுரல் சயின்ஸ், அக்ரி சயின்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது எம்.வி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: லேப் டெக்னீசியன்

காலியிடங்கள்: 10
தகுதி: லைப் சயின்ஸ் பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிஎம்எல்டி, எம்எல்டி தொழில்நுட்ப படிப்புடன் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.21,000
வயதுவரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு விடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடைபெறும்.
நேர்முகத் தேர்வு தேதி மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cdfd.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய : http://www.cdfd.org.in/apps/empc-4_202009/   என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.10.2020

தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை

    
காலியிடங்கள்: 65
பணி: புரொபஸர்,  அசிஸ்டன்ட் புரொபஸர், அசோசியேட் புரொபஸர் 
தகுதி:  சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற பொறியியல் துறை மற்றும் கணிதம், மேலாண்மை பிரிவில் என்ஐடி விதிமுறைப்படி தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணிஅனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ய்ண்ற்ள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி: Dean (F.W), National Institute of Technology Silchar, P.O. Silchar - 788 010, Assam.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.10.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.