தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வு எழுத விரும்புபவர்கள் நவம்பர் மாதம், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன் எனப்படும் தேர்வினை வரும் டிசம்பர் மாதம் நடத்துகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் இளநிலை முதுநிலை தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்லது ஹையர் கிரேடு தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த கணினித் தகுதித் தேர்வினை எழுதலாம்.
தேர்வு எழுத விரும்புபவர்கள் இயக்குநரகத்தின் இணையதளமான, http:www.tndte.comota.html மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் நவம்பர் 16ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதே இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதை அச்செடுத்து நிரப்பி உரிய சான்றிதழ்களுடன் (சான்றொப்பத்துடன்) நவம்பர், 23ம் தேதிக்குள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
டிசம்பர்-26 ஆம் தேதி முதல் தாளுக்கான தேர்வும், 27 ஆம் தேதி இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறும். மற்ற விபரங்களை இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: மதுரையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


