வேளாண்மைத்துறை வேலைக்கு ஒரு படிப்பு!
பண்ணைக் கருவிகள் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 3 ஆண்டுகள் இளங்கலை தொழில் படிப்பு (ஆ.ஸ்ர்ஸ்ரீ) அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.


பண்ணைக் கருவிகள் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 3 ஆண்டுகள் இளங்கலை தொழில் படிப்பு (ஆ.ஸ்ர்ஸ்ரீ) அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. கௌசல் கேந்திரா திட்டத்தின் கீழ், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த பட்டப் படிப்பில் சேர்வதற்கு, அடிப்படை கல்வித் தகுதி பிளஸ் 2.
இதுகுறித்து காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை பேராசிரியர் ஆர்.உதயகுமார் நம்மிடம் கூறியதாவது:
""40 சதவீதம் வகுப்பறை பாடம்(தியரி), 60 சதவீதம் செய்முறை பயிற்சி (ப்ராக்டிக்கல்) என பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மண் பராமரிப்பு, நீர்ப்பாசன மேலாண்மை, பாரம்பரிய வேளாண்மை, இயற்கை வேளாண்மை, அங்கக வேளாண்மை, விதை நேர்த்தி, உளவு, நடவு, களையெடுத்தல், அறுவடை உள்பட வேளாண்மை தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதுதவிர, வேளாண் கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் பழுதுநீக்குதல் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தோட்டம் அமைத்தல், பூங்கா வடிவமைப்பு போன்ற தோட்டக்கலை தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் கௌசல் கேந்திரா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே இந்த பாடப்பிரிவு கற்றுக் கொடுக்கப்படுகிறது. தென்னிந்திய அளவில் மஹாராஷ்ட்ரத்தில் மட்டுமே இதற்கான மற்றொரு வாய்ப்புள்ளது.
பண்ணைக் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப இளங்கலை பட்டப்படிப்பு 3 ஆண்டு பாடத்திட்டமாக தயாரிக்கப்பட்டிருந்தாலும், 6 மாதம், ஓராண்டு, 2 ஆண்டு என்ற அளவில், விருப்பதற்கு ஏற்ப குறைந்த காலப் பயிற்சியாகவும் பெற முடியும். 6 மாதங்கள் முடித்தால் சான்றிதழ், ஓராண்டு நிறைவு செய்தால் பட்டயம், 2 ஆண்டுகள் படிப்புக்கு உயர் பட்டயம், 3 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்தால் இளங்கலைப் பட்டம் பெற முடியும்.
முதல் 6 மாதத்தில், டிராக்டர் இயக்குவதற்கும், பிற உழவுக் கருவிகளை இணைத்து பயன்படுத்தவும் கற்றுக் கொடுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.அதனைத் தொடர்ந்து, நிலம் சமன்படுத்துதல், உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல், பூச்சி மருந்து அடித்தல், அறுவடை செய்தல், நெல் தூற்றும் கருவிகளை பயன்படுத்துதல், பெறப்பட்ட மகசூலை நுகர்வாரிடம் சேர்ப்பது வரையிலும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
படித்து முடிக்கும் மாணவர்கள், உடனடி வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பண்ணைக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலோசனையின் பேரிலேயே, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
படிப்பை முடித்தவர்கள், சுயதொழில் தொடங்கியும் பயன்பெறலாம். டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களில், பழுது நீக்கும் ஆய்வாளராகவும் பணிபுரியலாம். பண்ணைகளில் மேற்பார்வையாளராகப் பணியாற்ற வாய்ப்புள்ளது. நாற்றாங்கால் அமைத்து வருமானம் பெறலாம். டிராக்டர், பவர் டில்லர், நடவு இயந்திரம், அறுவடை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் அதிக வேலை வாய்ப்புள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...