வெளிச்சத்துக்கு வராத திறமைசாலிகளைக் கண்டறியும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர்களைப் பதிவு செய்கிறார். அப்படி அவர் ஒடிஸ்ஸாவைச் சேர்ந்த பதினெட்டு வயதான மாற்றுத்திறனாளியும், வில்வித்தை வீராங்கனையுமான பாயல் நாக் என்பவரைப் பாராட்ட, தேசிய அளவில் அது பலரது கவனத்தை ஈர்த்தது.
பாங்காக்கில் ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற ஹூண்டாய் உலக வில் வித்தை மாற்றுத்திறனாளித் தொடரின் மகளிர் கூட்டு இறுதிப் போட்டியில், தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார், பாயல் நாக். கட்டடத் தொழிலாளரின் மகளாகப் பிறந்த அவரது வாழ்க்கை, எட்டு வயதில் வியக்கத்தக்க வகையில் திருப்பத்தைச் சந்தித்தது. 2015-இல் மின்சார விபத்தில் பாயலின் கை, கால்கள் கருகின. உடல் உறுப்புகள் இழப்போடு, சமூகத்தின் கடுமையான பார்வையும், விமர்சனங்களும் முணுமுணுப்பும் பாயலைத் துன்புறுத்தின. ஆனாலும், மனம் தளராது சாதனை நிகழ்த்தியுள்ள பாயல் கூறியது:
'இந்த நிலையை நான் அடைந்தபோது, உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் தினமும் மறக்காமல் துக்கம் விசாரித்தனர். இதைக் கேட்டு நானும், எனது பெற்றோரும் அழுவோம். ' என்னை வளர்ப்பதற்குப் பதில் கொன்றுவிடலாம் என்றும்கூட சிலர் சொல்லியிருக்கின்றனர்.
வாழ வேண்டுமே என்று ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம் தேடினேன். ஓவியக் கலையைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது வில் வித்தையில் உலக சாம்பியன் ஷீத்தல் தேவிக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் குல்தீப் வேத்வான் என்னைப் பற்றி அறிந்து, கட்ரா மாதா வைஷ்ணோதேவி வில்வித்தை அகாதெமிக்குக் கொண்டு சென்றார். அங்கு எனக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டன.
எனக்காகவே வில்வித்தைக்கான சிறப்பு உபகரணங்களை பயிற்சியாளர் உருவாக்கினார். பயிற்சியும் பெற்றேன். படிப்படியாக நான் முன்னேறி, தேசிய அணியில் இடத்தைப் பிடித்தேன். இறுதிப் போட்டிக்கு முன்னேறினேன்.
பாங்காக்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை தொடரின் இறுதிப் போட்டியில், எனக்கு முன்மாதிரியாக இருந்த ஷீத்தல் தேவி அக்காவை நான் வென்றேன். இறுதிப் போட்டிக்கு முன்னேறுவேன் என்று நினைக்கவே இல்லை. ஏனெனில், எனக்கு புதிய கருவிகள் வழங்கப்பட்டன. அவற்றில் நான் பழகவில்லை. பயிற்சியாளரோ, 'கவனத்தைச் சிதறவிடாமல் வில் அம்பைக் கையாள வேண்டும்' என்று சொன்னார். அதன்படியே சாதித்தேன்!' என்கிறார் பாயல் நாக்.
பயிற்சியாளர் குல்தீப் வேத்வான்
'எத்தகைய சிறந்த வீராங்கனைகளை உருவாக்கியிருக்கிறேன் என்பதை உணர்ந்துள்ளேன். கைகள் இல்லாத உலகின் முதல் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி. அதனால், கை, கால்கள் இல்லாத இன்னொரு வில்வித்தை வீரரையோ, வீராங்கனையோ ஏன் கண்டுபிடிக்கக் கூடாது என்று நான் சிந்தித்தேன். பாயலின் ஓவியங்களை எனது கவனத்துக்குக் கொண்டுவந்து, கடவுள் எனது பிரார்த்தனைக்கு விடையளித்தார்.'
ஆனந்த் மஹிந்திராவின் சமூக ஊடகப் பதிவு
'ஒடிஸ்ஸாவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் பாயல் நாக் . இவர் தனது எட்டாவது வயதில் மின்சாரம் தாக்கியதில் கை, கால்களை இழந்தார். அவர் கையில் ஒரு வில் வந்து சேர்ந்தது. பாயலின் வாழ்க்கை திசை மாறியது.
எப்போதெல்லாம் நான் மனச்சோர்வை உணர்கிறேனோ, அப்போதெல்லாம் பாயல், ஷீத்தல் தேவியை நினைத்துக் கொள்வேன். 'துணிவு', 'உறுதி', 'நேர்மறைச் சிந்தனை' ஆகிய வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்வேன். இந்தச் சாதனையாளர்கள் ஒவ்வொரு நாளும், எனக்கு உத்வேகம் தந்து கொண்டிருப்பவர்கள்' என்கிறார் ஆனந்த் மஹிந்திரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோலிவுட் ஸ்டூடியோ!
பயணம் தொடர்கிறது...

கலையே உயிர்மூச்சு...
தாமரைக் கரங்களால் 40 ஆயிரம் பிரசவம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

