காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்துக்கு அருகேயுள்ள மேவலூர்குப்பத்தில் வள்ளீசுவரர் கோயிலில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்பலகை நிலத்தில் புதைந்து காணப்படுகிறது. சோழ மன்னன் அதிராஜேந்திரன் (1067-76) காலத்தைய அந்தக் கல்வெட்டில் காணப்படும் செய்திகள்:
வீரராசேந்திர சோழனின் புதல்வரான இவர், சோழர் வரலாற்றில் மிகக் குறைந்த காலமே ஆட்சி செய்தவர். இவருடைய கல்வெட்டுகள் தொண்டை நாடு, நடுநாடு, தஞ்சாவூர், ஈழநாட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன.
தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் செங்காட்டுக் கோட்டத்தில் உள்ள பெருங்களூர் பாக்கத்து ஊர் சபையினர் வழிபாட்டுக்கும், இறைவனுக்கு அமுது படைப்பதற்குமான நிலத்தை அளித்துள்ளனர். நிலத்தின் நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. மேவலூர்குப்பம் என்று அழைக்கப்படும் ஊர் வள்ளியூர் திருவள்ளீசுவரமுடையார் மகாதேவர் கோயில் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் புலியூர்க் கோட்டத்து மாங்காட்டு நாட்டைச் சேர்ந்த நாட்டுப் பிரிவையும் குறிப்பிடுகிறது.
கற்பலகையில் இரு பக்கங்களும் 24 வரிகளும், இறுதிப் பகுதியில் நான்கு வரிகளும் அழிக்கப்பட்ட நிலையில் காணப்
படுகின்றன. முன்பகுதியில் காணப்படும் கல்வெட்டு வாசகம் போன்றே உள்ளது. கல்வெட்டை பொறிப்பதற்கு முன் இந்தப் பகுதியில் தொடங்கி, பின்னர் கற்பலகையின் மற்றொரு பகுதியில் கல்வெட்டை பொறித்திருப்பார்கள் எனக் கருதத் தோன்றுகிறது.
-கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (பணி நிறைவு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சித்திரை பிறந்தாலே விழாக்கோலம்

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

முனியசுவாமியாக வணங்கப்படும் கல்வெட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

